வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு -தமிழக அரசு..!!

 வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு -தமிழக அரசு..!!

அரசு வேலைகளில் முன்னுரிமை கிடைப்பதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருடத்திற்கு ஒருமுறை புதுப்பித்து வருகின்றனர். ஒருசிலர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பிக்க தவறிவிடுகின்றனர். இந்நிலையில் 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்து புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவும் 27.8. 2021 குள் புதுப்பித்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment