விவேக் - கே.வி.ஆனந்த் : பரவும் அதிர்ச்சி தகவல்..!! - Tamil Crowd (Health Care)

விவேக் – கே.வி.ஆனந்த் : பரவும் அதிர்ச்சி தகவல்..!!

 விவேக் – கே.வி.ஆனந்த் : பரவும் அதிர்ச்சி தகவல்..!!

நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுதினம் நெஞ்சு வலி ஏற்பட்டு சென்னை சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். இதையடுத்து தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் விவேக் உயிரிழந்தார் என்று மக்கள் அச்சம் தெரிவித்தனர். இந்த அச்சத்தினை போக்க அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த செய்தியையும் படிங்க

 இது உங்கள் இடம்: அடிப்படை நாகரிகம் இல்லையே..!| 

இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் தடுப்பூசி போட்டுக்கொண்ட இயக்குநர் கே.வி.ஆனந்த் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனையில் கொரோனா இருப்பது தெரியவந்துள்ளதாக தகவல்.

இதனால்தான் அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க மறுத்து, நேரடியாக பெசண்ட் நகர் மயானத்திற்கு கொண்டு செல்கிறது மருத்துவமனை நிர்வாகம். அங்கு அவரது உடல் அரசு முறைப்படி எரியூட்டப்படுகிறது. இதற்கு இடையில், வழியில் 5 நிமிடங்கள் மட்டும் அவர் வீட்டில் மரியாதை செய்ய கே.வி.ஆனந்த் உடல் வைக்கப்படுகிறது.

இதற்கிடையில், 20 நாட்களுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கே.வி.ஆனந்துக்கு மாரடைப்பு வந்ததால், அவரது உறவினர்கள் வட்டாரத்தில் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் மாரடைப்பு வந்ததால், நடிகர் விவேக் மரணத்தையும், கே.வி. ஆனந்த் மரணத்தையும் பற்றி அதிர்ச்சி தகவலும் பரவுகிறது.

Leave a Comment