விவசாயிகளுக்கான ரூ.6000 நிதியுதவி-செப்டம்பர் 30 கடைசி தேதி..!!
பிரதமர் கிசான் சம்மான்:
பிரதமர் கிசான் சம்மான் என்பது மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும். இது டிசம்பர் 1, 2018 முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இதன் கீழ், விவசாயிகளுக்கு தலா ரு.2,000 என மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ 6,000 கிடைக்கிறது.. இந்த நிலையில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு ஒரு முக்கியமான செய்தி வந்துள்ளது.. இந்த திட்டத்தில் பதிவு செய்திருந்தும் உங்களுக்கு முந்தைய தவணைகளின் பணம் கிடைக்கவில்லை எனில், அடுத்த தவணையில் அந்த தொகை சேர்த்து வழங்கப்படும் என்று கூறப்படுகிறது..
எனினும், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் பதிவு செய்யாத விவசாயி எனில், நீங்கள் பதிவு செய்ய செப்டம்பர் 30 கடைசி தேதி. இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கவில்லை எனில், உங்களுக்கு அரசு வழங்கும் ரூ. 6000 நிதியுதவி கிடைக்காது.. ஆனால் இந்த திட்டத்தில் விண்ணப்பத்தவர்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ. 2000 செலுத்தப்படும். அக்டோபர் அல்லது நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் மற்றொரு தவணை ரூ. 2000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்..
PM-Kisan திட்டத்தில் பதிவு செய்வது எப்படி?
படி 1: PM கிசானின் https://pmkisan.gov.in/. என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தைப் பார்வையிடவும் –
படி 2: இப்போது முகப்புப்பக்கத்தில் ‘Farmer’s Corner Section’ என்பதை கிளிக் செய்யவும்.
படி 3: இப்போது ‘New Farmer Registration’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
படி 4: உங்கள் ஆதார் விவரங்களை உள்ளிடவும்.
படி 5: கேப்ட்சா குறியீட்டை சரியாக உள்ளிட்டு, படிவத்தின் அடுத்த பக்கத்திற்குச் செல்ல submit என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 6: உங்கள் விவரங்களை நிரப்பவும்
படி 7: விவசாய நிலம் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் தொடர்பான தகவல்களை நிரப்பவும்
படி 8: படிவத்தை சமர்ப்பிக்கவும்.
உங்கள் PM-KSNY தவணையை எப்படி சரிபார்ப்பது..?
படி 1 – அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும் – https://pmkisan.gov.in/.
படி 2 – இப்போது முகப்புப்பக்கத்தில் ‘Farmer’s Corner Section’ பார்க்கவும்.
படி 3 – ‘Beneficiary Status’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். இங்கே, பயனாளி தனது விண்ணப்ப நிலையை சரிபார்க்கலாம். பட்டியலில் விவசாயியின் பெயர் மற்றும் அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்ட தொகை இருக்கும்.
படி 4 – உங்கள் ஆதார் எண் அல்லது கணக்கு எண் அல்லது மொபைல் எண்ணை உள்ளிடவும்.
படி 5 – பின்னர் ‘Get data” என்பதைக் கிளிக் செய்யவும்.. உங்களுக்கு தேவையான விவரங்கள் கிடைக்கும்.
PM-KSNY : நிலையை எப்படி சரிபார்க்க வேண்டும்..?
படி 1: PM கிசான் அதிகாரப்பூர்வ இணையதளம்: pmkisan.gov.in-க்கு செல்லவும்
படி 2: இணையதளத்தின் மேல் வலதுபுறத்தில் உள்ள ‘Farmer’s Corner Section-ல் உள்ள ‘Beneficiary Status’ விருப்பத்தை கிளிக் செய்யவும்.
படி 3: பின்னர் புதிய பக்கம் உருவாகும்.. ஆதார் எண், வங்கி கணக்கு எண் அல்லது மொபைல் எண் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு எண்ணை தேர்ந்தெடுக்கவும். இந்த எண்களின் உதவியுடன், நீங்கள் PM கிசான் தொகையைப் பெற்றுள்ளீர்களா இல்லையா என்பதையும் சரிபார்க்கலாம்.
படி 4: நீங்கள் தேர்ந்தெடுத்த விருப்பத்தின் விவரங்களை நிரப்பவும்.
படி 5: PM கிசான் 8 வது தவணை தொடர்பான தகவல்களையும் பெறுவீர்கள்.