விதவைப் பெண்களுக்கான மத்திய அரசின் பென்சன் பெற தேவையான ஆவணங்கள்.. ??

 விதவைப் பெண்களுக்கான மத்திய அரசின்  பென்சன் பெற 


 தேவையான ஆவணங்கள்.. ??

வித்வா பென்ஷன் யோஜனா திட்டம்:

விதவைப் பெண்களுக்கு உதவும் வகையில் வித்வா பென்ஷன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

திட்டம் மூலம் பயன் பெற:

பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் ஒரு திட்டம் தான் பென்ஷன் யோஜனா.  விதவைப் பெண்களுக்கு உதவுவதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

  • வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள விதவைப் பெண்கள் மட்டுமே இத்திட்டத்தில் இணைய முடியும். 
  • வேறு எந்த பென்சன் திட்டத்தில் இணைந்து பயன்பெறும் விதவை பெண்கள் இத்திட்டத்தின் கீழ் இணைய முடியாது.
  • வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக உள்ள பெண்களுக்கு மட்டுமே இந்த உதவி கிடைக்கும். 

பென்சன் பெற  தேவையான ஆவணங்கள்:

மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வந்தாலும் இதற்கான பென்ஷன் தொகை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் விதவை பெண்களுக்கு பென்சன் பணம் கிடைக்கும். 

 இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு 

  1. ஆதார் கார்டு 
  2.  கணவன் இருந்ததற்கான இறப்பு சான்றிதழ், 
  3. வருமான சான்றிதழ்,
  4.  வயதுக்கான சான்றிதழ், 
  5. வங்கி கணக்கு புத்தகம், 
  6. மொபைல் நம்பர், 
  7. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 

ஆகியவை தேவைப்படுகிறது.

 தகுதியான விதவை பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற வேண்டும். 

1 thought on “விதவைப் பெண்களுக்கான மத்திய அரசின் பென்சன் பெற தேவையான ஆவணங்கள்.. ??”

Leave a Comment