விண்ணப்பித்த 15 நாட்களில் புதிய ரேஷன் கார்டு(MART CARD)கள் வழங்கப்படும்- உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி..!!

 விண்ணப்பித்த 15 நாட்களில் புதிய ரேஷன் கார்டு(RATION CARD)கள் வழங்கப்படும்- உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி..!!

 விண்ணப்பித்த அனைவருக்கும்  15 நாட்களில் ரேஷன் கார்டுகள்(RATION CARD) வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த செயல்முறையும் தொடர்ந்து வருகிறது.

3 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள்(SMART CARD) வழங்கப்பட்டுள்ளது:

இதில் சமீபத்தில் தொடங்கிய புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணியில் இதுவரை 3 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஸ்மார்ட் அட்டைகளுக்கு ஆகஸ்ட் 1 முதல் ரேஷன் கடைகளில் பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ :

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற தலைப்பின் கீழ் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி கூறுகையில், தமிழகத்தில் புதிய ஸ்மார்ட் கார்டு(SMART CARD)ளுக்காக இதுவரை 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவற்றில் 3 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்:

மேலும் மற்ற விண்ணப்பங்களுக்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசின் அறிவுறுத்தல்களின் படி 15 நாட்களில் புதிய குடும்ப அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் புதிய ரேஷன் அட்டைதாரர்கள்(RATION CARD) ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருட்களை பெற்றுக்கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment