வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி..?? - Tamil Crowd (Health Care)

வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி..??

 வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் டவுன்லோடு

 செய்வது எப்படி..??

டிஜிட்டல்(Digital ) முறையில் வாக்காளர் அடையாள அட்டையைப் பெறும் திட்டத்தை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி எப்படி டவுன்லோடு செய்வது என்பதை பார்ப்போம்.

இந்திய தேர்தல் ஆணையம் இணையதளத்தின் வாயிலாக வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யும் வசதியை உருவாக்கி உள்ளது. முதல்கட்டமாக இந்த வசதி, தமிழகத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட 21.39 லட்சம் வாக்காளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 16 – டிசம்பர் 15 வரை நடத்தப்பட்ட புதிய வாக்காளர்கள் சேர்ப்பு முகாமின் போது வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்தவர்கள், அப்போது தாங்கள் வழங்கிய செல்லிடப்பேசி எண்ணைக் கொண்டு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலிருந்து தங்களது வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

http://www.nvsp.in/ என்ற இணையதள முகவரியில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையை இணையத்தில் பதிவிறக்கம் செய்ய வாக்காளர் அடையாள அட்டை எண் தெரிந்திருக்க வேண்டும். அதாவது, நீங்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க விண்ணப்பித்ததும், உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதற்கான குறுந்தகவல் (Message)உங்கள் மொபைலுக்கு வரும்.

அதில் இபிஐசி(Electoral photo identity card)(EPIC) எனப்படும் வாக்காளர் அடையாள எண் இருக்கும். அதை வைத்துத்தான் வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய முடியும்.

அதன்படி, வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய http://www.nvsp.in/ என்ற இணையதளத்துக்குச் செல்லுங்கள்.உங்களது செல்லிடப்பேசி அல்லது மின்னஞ்சல் முகவரியை முதலில் பதிவு செய்து கொள்ளுங்கள். பிறகு, புதிய பயனாளர் முகவரியை உருவாக்குங்கள்.

அதை வைத்து உள் நுழைந்து, உங்களது வாக்காளர் அடையாள எண் அல்லது அது தொடர்பான குறுந்தகவலில் வந்த எண்ணைப் பதிவு செய்யுங்கள். உங்களது மாநிலத்தையும் பதிவு செய்து, வாக்காளர் அடையாள அட்டையைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Leave a Comment