வாக்களிக்க தேவையான 11 ஆவணங்கள்-தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்..!!

 தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க


 தேவையான 11 ஆவணங்கள்..!! 

 தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க தேவையான 11 ஆவணங்கள் – பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து வாக்களிக்க தேவையான அடையாள ஆவணங்களின் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்:

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து மாவட்டத்திற்கும் ஒரே கட்டமாக தேர்தல் வருகிற பிப்ரவரி 19ம் தேதி நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து வாக்குப்பதிவு 19ம் தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 22ம் தேதி அன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அறிக்கை:

 இந்த தேர்தலில் ஆள் மாறாட்டங்கள் உள்ளிட்ட முறைகேடுகள் ஏற்படுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் இருக்கும் வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி சீட்டை கொண்டு வாக்களிக்கலாம்.

 வாக்களிக்க தேவையான 11 ஆவணங்கள்:

அத்துடன் வாக்குச்சாவடி சீட்டு இல்லாதவர்கள் வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அனுமதித்த 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி

 1.  வாக்குச்சாவடி சீட்டு
 2. ஆதார் அட்டை,
 3.  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை, 
 4. அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், 
 5. தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, 
 6. ஓட்டுநர் உரிமம், 
 7. பான் கார்டு, 
 8. இந்திய பாஸ்போர்ட், 
 9. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், 
 10. பணியாளர் அடையாள அட்டை ,
 11. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அலுவலக அடையாள அட்டை 

உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தை வாக்கு சாவடிகளில் காண்பித்து வாக்களிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment