வழிபாட்டுத்தலங்கள் JULY -5 திறப்பு-இதற்கெல்லாம் தடை: பக்தர்களுக்கு அறிவுறுத்தல்..!!

 வழிபாட்டுத்தலங்கள் JULY -5 திறப்பு-இதற்கெல்லாம் தடை: பக்தர்களுக்கு அறிவுறுத்தல்..!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டு உள்ளன. கோவில் திருவிழாக்கள் போன்ற விழாக்கள் மூலம் மக்கள் அதிகளவில் கூடும்போது தொற்று பரவும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 இந்த செய்தியையும் படிங்க…

தமிழகம் முழுவதும் திங்கள் கிழமை (ஜூலை 5) முதல் செயல்பட அனுமதி..!! 

எனினும் கோவில்களில் அந்தந்த பணியாளர்கள் மட்டும் சென்று வழக்கமான பூஜைகளை செய்து வந்தனர். இதனால் மக்களும் தங்கள் வீடுகளிலேயே வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த தளர்வுகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

அந்த வகையில்,  (ஜூலை 5) முதல் தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் உள்பட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

 இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள

 கோவில்கள், 

மசூதிகள், 

கிறிஸ் தவ ஆலயங்களில் 

கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் பணிகள் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

  • பக்தர்களின் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் மூலம் சரி பார்க்கப்படும்.
  •  இதில், உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 
  • கோவில்களுக்கு பூ, பழம், மாலை உள்ளிட்ட பூஜை பொருட்களை கொண்டு வர அனுமதி கிடையாது. 
  • அபிஷேகத்தின் போது பக்தர்கள் கோவிலுக்குள் அமர அனுமதிக்கப் பட மாட்டார்கள். 
  • விபூதி, குங்குமம் ஆகியவை பிரசாத தட்டில் வைக்கப்பட்டு இருக்கும்.அதை பக்தர்கள் எடுத்துக்கொள்ளலாம். 
  • கொரோனா தடுப்பு விதிகளை பக்தர்கள் முழுமையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்களிலும் வழிபாடு நடத்துவதற்கு உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அங்கும் பல்வேறு தடுப்பு நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment