வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையினருக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை:முதல்வருக்கு சங்கத்தினர் கோரிக்கை..!!

 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையினருக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை : முதல்வருக்கு சங்கத்தினர் கோரிக்கை..!!

தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் குமரேசன், மாநில பொது செயலாளர் எம்.பி.முருகையன் ஆகியோர் முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:மருத்துவத்துறை மற்றும் காவல்துறைகளைவிட அதிக எண்ணிக்கையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. 

இந்த செய்தியையும் படிங்க…

 8 மாவட்ட கலெக்டர்கள் உட்பட 20 IAS அதிகாரிகள் மாற்றம்:  தலைமை செயலர் இறையன்பு ..!! 

முதல்வரின் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ சிறப்பு திட்டத்தில் மனுக்களை ஊரடங்கு காலத்திலும் கள விசாரணை மேற்கொண்டு, ஆய்வுகளுக்குப் பின் முடிவு செய்து நலத்திட்டங்களை கொண்டு சேர்க்கும் முக்கிய பணியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். 

இந்த சூழ்நிலைகளில், மருத்துவம் மற்றும் காவல் துறையினரின் பணியினை அங்கீகாரம் செய்து ஊக்க ஊதியம் வழங்கியதைப் போன்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அலுவலர்களின் பணியினை அங்கீகாரம செய்து ஊக்கம் அளித்திட வேண்டும்.

Leave a Comment