வருமான வரிச் சலுகை :தொடர்பாக முக்கிய நிபந்தனைகள்..!! - Tamil Crowd (Health Care)

வருமான வரிச் சலுகை :தொடர்பாக முக்கிய நிபந்தனைகள்..!!

 வருமான வரிச் சலுகை :தொடர்பாக முக்கிய  நிபந்தனைகள்..!!

வருமான வரிச் சட்டத்தின் 80 சி (80C) பிரிவின் கீழ் பெறக்கூடிய வருமான வரிச் சலுகைகள் பரவலாக அறியப்பட்டதே. வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள், இந்த பிரிவின் கீழ் வரும் பிடித்தங்கள் மற்றும் முதலீடுகளை முக்கியமாக கணக்கில் எடுத்துக்கொள்வதும் வழக்கம். 

இந்த செய்தியையும் படிங்க…

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையினருக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை:முதல்வருக்கு சங்கத்தினர் கோரிக்கை..!!

வீட்டுக்கடன்(HOME LOAN), பி.எப்(PF)., சேமிப்பு(SAVING), காப்பீடு, கல்விக் கட்டணம்(Education Loan உள்ளிட்டவை இந்த பிரிவில் வருவதும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால், இந்த சலுகைகள் அவற்றுக்கான நிபந்தனைகளை கொண்டிருப்பது உங்களுக்கு தெரியுமா? வரிச் சலுகை தொடர்பான முக்கிய நிபந்தனைகளை பார்க்கலாம்.

வீட்டுக் கடன்(HOME LOAN): 

வீட்டுக் கடன் அசலுக்காக, திருப்பிச் செலுத்தும் தொகைக்கு விலக்கு கோரலாம் என்றாலும், சொந்த பயன்பாட்டிற்கான வீட்டிற்கு பெறப்பட்ட கடனுக்கு மட்டுமே இது பொருந்தும். மேலும், வங்கி, வீட்டு வசதி நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றிருக்க வேண்டும். எனினும், 24 பி(24B) பிரிவில், வட்டிக்கான சலுகைக்கு எல்லா வகை கடனும் பொருந்தும்.

ஐந்து ஆண்டுகள்: 

மேலும், வீடு வாங்கிய நிதியாண்டில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் வீட்டை மாற்றிக்கொடுத்தால், வருமான வரிச் சலுகை பொருந்தாது மற்றும் அந்த தொகை வருமானத்துடன் சேர்க்கப்படும். எனினும் வட்டி தொடர்பான சலுகைக்கு இந்த நிபந்தனை கிடையாது. ஐந்தாண்டுகளுக்கு பிறகு வீட்டை மாற்றினாலும் இது பொருந்தாது.ஆயுள் காப்பீடு: ஆயுள் காப்பீடு ‘பாலிசி’களுக்கான பிரீமியம் தொகையும் வரிச் சலுகைக்கு உரியது.

குடும்பஉறுப்பினர்களுக்கான பாலிசிக்கும் இது பொருந்தும். எனவே ஓய்வு பெற்றவர்கள், பிள்ளைகளுக்கான பாலிசி செலுத்தி அதற்கு வரிச் சலுகை கோரலாம். ஆனால், பிள்ளைகள், பெற்றோருக்கு பாலிசி எடுத்தால் இந்த சலுகை பெற முடியாது.

கல்வி கட்டணம்(EDUCATION LOAN): 

பிள்ளைகளுக்கான கல்வி கட்டணத்திற்கும் வரிச் சலுகை கோரலாம். எனினும், இரண்டு குழந்தைகளுக்கான கல்வி கட்டணத்திற்கு மட்டுமே இது பொருந்தும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால், அவர்கள் கல்வி செலவுக்கு சலுகை கோர முடியாது. ஆனால், மனைவி வருமான வரி செலுத்துபவராக இருந்தால்,அவர் இதற்காக சலுகை பெறலாம்.

இந்த செய்தியையும் படிங்க…

11 நிமிட பயணம் தான்: ஒரு பயண டிக்கெட்டின் விலை ரூ.205 கோடி..!!

வைப்பு நிதி(SAVING): 

பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் செய்யும் சேமிப்பு, வரிச் சலுகைக்கு உரியது என்றாலும், இதற்கு, 1.50 லட்சம் ரூபாய் வரம்பு உண்டு. மனைவி பெயரில் தனி கணக்கு துவக்கினாலும், இந்த வரம்பு பொருந்தும் என்றாலும், வட்டி மற்றும் முதிர்வு தொகைக்கு வரி கிடையாது என்பது அனுகூலமாகும்.

Leave a Comment