வணிக வரித் துறையில் இணை ஆணையர்கள் 16 பேர் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு..!!

 வணிக வரித் துறையில் இணை ஆணையர்கள்  16 பேர் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு..!!

தமிழகத்தில் வணிக வரித் துறையில் இணை ஆணையர்கள் 16 பேர் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த செய்தியையும் படிங்க…   

 RTE சட்டத்தின்கீழ் நடப்பு கல்வியாண்டில் சேர்க்கைக்கு கோருவோர் விண்ணப்பிக்கலாம் : மெட்ரிக் பள்ளி இயக்குநரகம்..!! 

 இது தொடர்பாக வணிகவரிகள் மற்றும் பதிவுத்துறை செயலர் பா.ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

 வணிகவரித் துறையில் நிர்வாக அடிப்படையில் 16 இணை ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி 

1) சென்னை தெற்கு இணை ஆணையர் ஏ.சுவாமிநாதன் மாற்றப்பட்டு, தமிழ்நாடு வரிகள் மேல்முறையீடு தீர்ப்பாயத்தின் கூடுதல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். 

2) சென்னை கிழக்கு இணை ஆணையர் எம்.ராஜி நெல்லை இணை ஆணையராகவும், 

3) தலைமையக இணை ஆணையர் எம்.குறிஞ்சிசெல்வன் மதுரை இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

4) நெல்லை இணை ஆணையர் டி.பத்மாவதி சென்னை தலைமையக இணை ஆணையராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

5) சென்னை இணை ஆணையர் (நுண்ணறிவு பிரிவு) எஸ்.எம்.சரஸ்வதி தலைமையக இணை ஆணையராகவும் (சட்டம்),

 6) திருச்சி இணை ஆணையர் (நுண்ணறிவு) எம்.சரோஜினி, வணிகவரிகள் மேல்முறையீட்டு தீர்ப்பாய மாநில பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 7) மதுரை இணை ஆணையர் (நுண்ணறிவு) எஸ்.ராஸியா சென்னை கிழக்கு இணை ஆணையராகவும், 

8) சேலம் இணை ஆணையர் (நுண்ணறிவு) பி.விமலா திருச்சி இணை ஆணையராகவும் (நுண்ணறிவு) நியமிக்கப்படுகிறார்கள்.

9) நெல்லை இணை ஆணையர் (நுண்ணறிவு) கே.சுகந்தி சேலம் இணை ஆணையராகவும் (நுண்ணறிவு), 

10) சென்னை இணை ஆணையர் (மேல்முறையீடுகள்) எம்.ரவி, தலைமையக இணை ஆணையராகவும் (மதிப்பு கூட்டுவரி மற்றும் தணிக்கை) பணியமர்த்தப்படுகிறார். 

11) சென்னை இணை ஆணையர் (சட்டம்) ஏ.அன்புகனி, சென்னை தெற்கு இணை ஆணையராகவும், 

12) மதுரை இணை ஆணையர் (சட்டம்) ஆர்.சண்முகானந்தன் நெல்லை இணை ஆணையராகவும் (நுண்ணறிவு) பணியமர்த்தப்படுகிறார்கள்.

13) சென்னை தலைமையக இணை ஆணையர் (மதிப்புக்கூட்டு வரி மற்றும் தணிக்கை) பி.சிவஹரிணி, சென்னை இணை ஆணையராகவும் (மேல்முறையீடுகள்), 

14) தலைமையக இணை ஆணையர் (ஜிஎஸ்டி-மேல்முறையீடு) ஆர்.பிரபாவதி சென்னை-2 இணை ஆணையராகவும் (நுண்ணறிவு) நியமிக்கப்படுகிறார்கள்.

 15) வணிகவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயமாநில பிரதிநிதி கே.எம்கார்த்தி கேயாணி சென்னை இணை ஆணையராகவும் (சட்டம்), 

16) வணிகவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயகூடுதல் உறுப்பினர் டி.இந்திராமதுரை இணை ஆணையராக வும் (நுண்ணறிவு) நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்த செய்தியையும் படிங்க…   

 பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பதவிக்கு எதிரான வழக்கு- தள்ளுபடி..!!

 இந்த இடமாற்றல் உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment