ரூ.78,800/- சம்பளத்தில்; தமிழ்நாடு ESIC வேலைவாய்ப்பு..!! - Tamil Crowd (Health Care)

ரூ.78,800/- சம்பளத்தில்; தமிழ்நாடு ESIC வேலைவாய்ப்பு..!!

  ரூ.78,800/- சம்பளத்தில்;  தமிழ்நாடு ESIC வேலைவாய்ப்பு..!!

Employees’ State Insurance Corporation எனப்படும் ESIC நிறுவனத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் பல்வேறு பிரிவுகளில் Specialist Grade ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

பணியிடங்கள் :

ESIC நிறுவனத்தில் Specialist Grade பணிகளுக்கு என மொத்தமாக 47 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு பதிவு செய்வோர் 01.11.2021 தேதியில் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் Postgraduate Degree பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.78,800/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

பணிக்கு விண்ணப்பிப்போர் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-

SC/ ST/ PWD/ Departmental candidates/ Women & Ex-Serviceman விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 01.11.2021 அன்று வரை தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Official Site – https://www.esic.nic.in/recruitments/index/page:5?url=recruitments

Leave a Comment