ரூ.50,000/- ஊதியம்; 8 th Pass; தமிழக அரசு வேலைவாய்ப்பு..!!

 ரூ.50,000/- ஊதியம்; 8 th Pass; தமிழக அரசு வேலைவாய்ப்பு..!!

விழுப்புரம்‌ மாவட்டம்‌, மரக்காணம்‌ பேரூராட்சியில்‌ காலியாக உள்ள அரசு நிலையாக்கப்படாத அலுவலக உதவியாளர்‌ மற்றும்‌ தூய்மை பணியாளர்‌ பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து 09.09.2021ம்‌ தேதிக்குள்‌ செயல்‌ அலுவலர்‌, மரக்காணம்‌ பேரூராட்சி என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம் :விழுப்புரம்‌ மாவட்டம்‌, மரக்காணம்‌ பேரூராட்சி

பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்‌ (ம) தூய்மை பணியாளர்‌

பணியிடங்கள்:02

விண்ணப்பிக்க கடைசி தேதி :09.09.2021

விண்ணப்பிக்கும் முறை :Offline

காலிப்பணியிடங்கள்:

அலுவலக உதவியாளர்: 01

தூய்மை பணியாளர்‌:01

வயது வரம்பு:

01.09.2021 (அன்றுள்ளபடி) அரசாணை (நிலை எண்‌.21 தொழிலாளர்‌ மற்றும்‌ வேலைவாய்ப்பு துறை நாள்‌.02.02.2000ன்‌ படி பள்ளி இறுதி வகுப்பிற்கு குறைவான கல்வித்தகுதியுடைய பதிவுதாரர்கள்‌ தாங்கள்‌ வேலைவாய்ப்பு அலுவலகத்தில்‌ பதிவு செய்த பதிவு மூப்பில்‌ மூன்றாண்டுக்கு ஒரு ஆண்டு வீதம்‌ அதிகபட்சம்‌ ஐந்தாண்டுகள்‌ வரை உச்ச வயது வரம்பில்‌ தளர்வு பெற தகுதியுடையவர்கள்‌ ஆவர்‌.

கல்வி தகுதி:

அலுவலக உதவியாளர்‌ – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

தூய்மை பணியாளர்‌ – எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

வரப்பெறும்‌ விண்ணப்பங்களில்‌ தகுதியான நபர்களுக்கு மட்டும்‌ எதிர்வரும்‌ 14.09.2021 அன்று முற்பகல்‌ 10.00 மணியளவில்‌ நேர்காணல்‌ நடத்தப்படும்‌ என அறிவிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்‌ 09.09.2021ம்‌ தேதிக்குள்‌ செயல்‌ அலுவலர்‌, மரக்காணம்‌ பேரூராட்சி என்ற முகவரிக்கு பதிவஞ்சல்‌ வாயிலாக விண்ணப்பம்‌ கிடைக்கப்பெற வேண்டும்‌.

நிபந்தனைகள்‌:

விண்ணப்பங்கள்‌ பதிவஞ்சலில்‌ மட்டுமே அனுப்பி வைக்கப்பட வேண்டும்‌. நேரில்‌ அளிக்கும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

நிர்ணயிக்கப்பட்ட நாளில்‌ நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு பின்னர்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல்‌ குறித்த விவரம்‌ பதிவஞ்சல்‌ வாயிலாக தெரிவிக்கப்படும்‌.

Leave a Comment