ரூ.39100/ – மாதச் சம்பளம்; EPFO வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!
ஊழியர் சேமநல நிதி அல்லது ஊழியர் வருங்கால வைப்பு நிதி (Employees’ Provident Fund) என்பது தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் ஒன்றாகும்.
அரசு நிறுவனங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் எதிர்கால நலன் கருதி தொழிலாளரின் மாதாந்த சம்பளத்தில் தொழில்தருநர் சார்பிலும் தொழிலாளர் சார்பிலும் பங்களிப்புச் செய்வதாகும்.
இந்தப்பங்களிப்புப்பணத்தை தொழிலாளர் ஓய்வு பெற்ற பின்னர் மீளப்பெற்றுக் கொள்ளலாம்.
இங்கு தற்போது காலியாக உள்ள துணை இயக்குனர், உதவி இயக்குனர், உதவி தணிக்கை அதிகாரி & தணிக்கையாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 98 பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு/ நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விளம்பர எண்: No.HRMVII/1(22)/Audit/2020 /E2655
நிறுவனம் :Employees’ Provident Fund Organisation (EPFO)
வேலையின் பெயர்: Deputy Director, Assistant Director, Assistant Audit Officer & Auditor
காலிப்பணி இடங்கள்: 98
தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்து தேர்வு/ நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
வயது: 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: செப்டம்பர் 8, 2021
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 23, 2021
கல்வி தகுதி:
B.Com and passed the SAS examination
விண்ணப்பிக்கும் ஆர்வமுள்ளவர்கள் தொடர்ந்து ஒத்த பதவிகளை (analogous posts) வகிக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்ப முறை: Offline
விண்ணப்ப கட்டணம்: No fees
இணையதள விவரம்: www.epfindia.gov.in
வேலையின் பெயர்- காலிப்பணியிட விவரங்கள்
Auditor- 34
Assistant Audit Officer- 26
Assistant Director (Audit)- 25
Dy. Director (Audit)- 13
Total: 98
சம்பளம் :
வேலையின் பெயர்- சம்பள விவரம்
Deputy Director- ரூ.15600-39100/-
Assistant Director- ரூ.15600-39100/-
Assistant Audit Officer- ரூ.9300-34800/-
Auditor- ரூ.9300-34800/-
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:
https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Recruitments_PDFs/HRM7_Deputation_Audit_1236.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.