ரூ.32,795 முதல் ரூ.60,000 வரை சம்பளம்/-; NIACL நிறுவனத்தில்- 300 காலிப்பணியிடம் அறிவிப்பு..!!

ரூ.32,795 முதல் ரூ.60,000 வரை சம்பளம்/-;  NIACL நிறுவனத்தில்- 300 காலிப்பணியிடம் அறிவிப்பு..!!

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NIACL) இல் நிர்வாக அதிகாரி காப்பீட்டுத் துறையில் பணியாற்ற விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் NIACL AO 2021-க்கான மொத்தம் 300 காலியிடங்களை வெளியிட்டுள்ளது.

இந்த காலியிடங்களுக்கு செப்டம்பர் 1 முதல் ஆன்லைன் விண்ணப்பிக்கலாம். NIACL இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதாவது newindia.co.in இல் விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 21-ஆம் நாள் விண்ணப்பிக்க கடைசி தேதியாகும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர் ஏப்ரல் 1, 2021 தேதியின்படி 30 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் ஏப்ரல் 2, 1991 க்கும்- ஏப்ரல் 1, 2000-க்கும் இடையில் பிறந்திருக்க வேண்டும்.

300 பணியிடங்கள்:

1.SC-46 

2.ST-22 

3.OBC – 81 

4. EWS – 30

 5.UR – 121

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு/முதுகலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் மற்றும் SC/ST/PWBD விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு இறுதி ஆண்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆட்சேர்ப்பு: 

கட்டம்1: ஆரம்பத் தேர்வு கட்டம்

 2: முதன்மைத் தேர்வு கட்டம்

 3 – நேர்காணல்

ஊதியம்:

குறைந்தபட்சம் ரூ.32,795 முதல் ரூ.60,000 வரை சம்பளம்.

Leave a Comment