ரஷ்யா-உக்ரைன் போர்: திடிர் திருப்பம்..??

ரஷ்யா-உக்ரைன்  போர்: திடிர் திருப்பம்..??

ரஷ்யாவின் கோரிக்கையை ஏற்க தயார், போரை முதலில் நிறுத்துங்கள்- ஜெலென்ஸ்கி அறிவிப்பு.

உக்ரைன் நடுநிலைமை தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ரஷ்யாவின் கோரிக்கையை ஏற்க தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவது தொடர்பான 5வது கட்ட பேச்சுவார்த்தை ஐரோப்பிய நாடான துருக்கியில் இன்று(திங்கள்கிழமை) நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உக்ரைன் நடுநிலைமையை தொடர வேண்டும் என்கிற ரஷ்யாவின் முக்கிய கோரிக்கையை பற்றி ஆலோசிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், பாதுகாப்பு, சர்வதேச உறவுகளில் உக்ரைன் நடுநிலைமை வசிக்கும் நாடு என்கிற நிலையை கடைபிடிக்க வேண்டும் என்கிற ரஷ்யாவின் கோரிக்கையை தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் அதனை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நடுநிலைமை நாடு என்பது , மேற்கு நாடுகளுடனும் நெருங்கிய உறவு மேற்கொள்ளாமல், ரஷ்யாவுடனும் நெருங்கிய உறவு மேற்கொள்ளாமல் அனைத்து விவகாரங்களிலும் நடுநிலைமை தன்மையை கடைபிடிப்பதாகும், உதாரணமாக அவுஸ்திரேலியா ஸ்விடன் போன்ற நாடுகள் ஐரோப்பிய நாடுகளுடனோ நேட்டோ அமைப்புடனோ இணையாமல் நடுநிலைமையுடன் இருப்பது போன்றதாகும்.

மேலும் வருங்காலங்களில் அணு ஆயுத சோதனைகளை செய்ய மாட்டோம் என்கிற உறுதியையும் தர தயாராக இருப்பதாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் உக்ரைனின் ராணுவத்தை கலைக்க முடியாது, ரஷ்யாவின் இந்த கோரிக்கையும் ஏற்கமுடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து மேலும் பேசிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, முதலில் தற்காலிகமாக போரை நிறுத்துங்கள், கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதை பற்றி விவாதிப்போம் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment