ரஷ்யா – உக்ரைன் போர் இனி உலக நாடுகள் சந்திக்கப்போகும் பொருளாதார பிரச்சனைகள்..??

 ரஷ்யா – உக்ரைன் போர் இனி உலக நாடுகள் சந்திக்கப்போகும்

 பொருளாதார  பிரச்சனைகள்..??

International Monetary Fund:

ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக மக்கள் மரணம், அகதிகள் பிரச்சனை இதை எல்லாம் தாண்டி வேறு ஒரு முக்கியமான பிரச்சனை ஏற்படும் என்றும் International Monetary Fund எனப்படும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது. மரியாபோல் நகரத்தில் ரஷ்யா இன்று கடுமையான தாக்குதல்களை நடத்தியது. இதுவரை நடைபெற்ற 6 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துவிட்டன.

நடுநிலையான நாடு என்ற அந்தஸ்தை உக்ரைன் இழக்கும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே சமயம் நேட்டோ படையில் கண்டிப்பாக இணைய மாட்டோம் என்றும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த போர் காரணமாக சர்வதேச பொருளாதாரம் பாதிக்கப்படும். விலைவாசி உயரும். உணவு பஞ்சம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் சர்வதேச பொருளாதாரம் மீண்டும் பல நாட்கள் ஆகும் என்று ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது. அதில், மனிதர்களின் மரணம், அகதிகள் பிரச்சனை தாண்டி, இதனால் விலைவாசி உயரும். உணவு பொருட்கள் தட்டுப்பாடு அதிகரிக்கும், எரிபொருள் தட்டுப்பாடு அதிகரிக்கும்.

இனிதான் போரின் விளைவுகள், பாதிப்புகள் நமக்கு தெரியும், மக்கள் வாங்கும் வருமானம் போதுமானது இல்லை என்ற நிலையை ஏற்படுத்தும். ஆசியா, ஐரோப்பா நாடுகளில் கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். சர்வதேச சந்தையில் நம்பிக்கையற்ற தன்மையை இது ஏற்படுத்தும். இதன் காரணமாக சர்வதேச பொருளாதார வளர்ச்சி 4.4 சதவிகிதம் குறையும் வாய்ப்புகள் உள்ளன. மண்டல ரீதியான சரிவுகள் எப்படி இருக்கும் என்பதை விரைவில் தெரிவிப்போம்.

ஏப்ரல் 19ம் தேதி இதை பற்றி கணிப்புகளை வெளியிடுவோம். டிரேட், சுற்றுலா, எண்ணெய் வளம் ஆகியவற்றை நம்பி இருக்கும் நாடுகள் அதிகம் பாதிக்கப்படும். அதேபோல் ஆப்ரிக்கா, மத்திய ஆசியா, லத்தீன் அமெரிக்கா நாடுகளும் இதனால் பாதிக்கப்படும். எகிப்தின் 80 சதவிகித கோதுமை ரஷ்யாவில் இருந்தும் உக்ரைனில் இருந்தும் செல்கிறது. இது பாதிக்கப்படும். இதேபோல் மத்திய கிழக்கு, ஆப்ரிக்க நாடுகளில் உணவு பஞ்சம் ஏற்படும். உணவு பஞ்சம் தலைதூக்கலாம்.

சர்வதேச பொருளாதாரத்தை இந்த போர் அடியோடு மாற்ற போகிறது. சர்வதேச உலக ஆர்டரை இந்த போர் மாற்றும். நுகர்பொருள், உணவு பரிமாற்றம் என்ற மொத்த மார்க்கெட் நெட்வர்க் இதனால் பாதிக்கப்படும். உலக நாடுகள் இதனால் தங்கள் பண இருப்பை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஐரோப்பா நாடுகள் எரிவாயு தொடர்பாக நேரடியான பாதிப்புகளை சந்திக்கும். அதேபோல் கிழக்கு ஐரோப்பா பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கும் என்று ஐஎம்எஃப் தனது எச்சரிக்கையை குறிப்பிட்டுள்ளது.

Leave a Comment