ரயில்வே வேலைவாய்ப்பு-2021: சம்பளம் ரூ.26950+6600; தேர்வு இல்லை..!!

 ரயில்வே வேலைவாய்ப்பு-2021: சம்பளம் ரூ.26950+6600; தேர்வு இல்லை..!!

மத்திய ரயில்வே நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம்.

மத்திய ரயில்வே ஆனது Medicine Oncology, ENT, Obst & Gynecology, Pediatrics, Orthopedic பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவித்துள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Post Graduate, DM, DNB, Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் மற்றவர்கள் விண்ணப்பிக்க முடியாது. 

மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உடையவர்கள் தங்களின் அசல் ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் என்று தனது அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம்தோறும் ரூபாய் 26950 வரை ஊதியம் வழங்கப்படும் மற்றும் ரூபாய் 6600 (Grade Pay) வழங்கப்படும்.

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

நேர்காணல் அனைத்து 15.07.2021 முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெற உள்ளது. 

பணியிடங்கள் 

  1. Pediatrics-01, 
  2. Orthopedic-01, 
  3. ENT-02, 
  4. Obst & Gynecology-02, 
  5. Medicine Oncology-01 

என மொத்தம் 6 பணியிடங்கள் என தனது அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த பணிக்கு விண்ணபிப்பதற்கான விண்ணப்பம் கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு: CamScanner 06-28-2021 15.07.12 (indianrailways.gov.in)

Leave a Comment