ரத்த அழுத்தத்தை விரட்ட – .ஒரு சில இயற்கை பொருட்கள்..!!
ஒருவர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படும் போது உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும். கொழுப்பு அதிகரிக்கும் போது இதயத்தமனிகளில் அடைப்பு உண்டாகி அவை இதய நோய் மாரடைப்பை உண்டாக்க பெருமளவில் வாய்ப்புண்டு. இன்று மாரடைப்பால் மரணம் அடையும் பலரும் தங்களது உயர் ரத்த அழுத்தத்தின் தீவிரத்தை உணராதவர்களே என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்தச் செய்தியையும் படிங்க…
மாம்பழம் சாப்பிட்ட பிறகு கூடவே -சில உணவுகளை சாப்பிடக்கூடாது..!!
ரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்க முடியாமல் போகும் போது இதயத்துடிப்பு சீரற்று காணப்படும். சராசரியாக துடிக்க வேண்டிய அளவிலிருந்து இரண்டு மடங்கு துடிக்ககூடும். இவை தொடரும் போது ரத்த உறைதல் பிரச்சனையையும் ரத்த ஓட்டத்தில் அவை உடலில் ஆங்காங்கே சிதறும் நிலையும் உண்டாகும். அப்படி சிதறும் ரத்தம் எந்த உறுப்பில் சென்று அடைப்பை ஏற்படுத்துகிறதோ அதை பொறுத்து அந்த உறுப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். அப்படி மூளையில் சென்று பாதிப்பை ஏற்படுத்தும் போது பக்கவாதம் வருகிறது.
ஒரு சில இயற்கை வழியில் கிடைக்கும் பொருட்களை வைத்தே, அந்த உயர் இரத்த அழுத்த நோயை குணப்படுத்த முடியும். அவை என்னவென்று இங்கே காணலாம் .
பூண்டு:
பூண்டிலுள்ள அல்லிசின், உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு கூடுவதற்கு உதவி செய்கிறது. அதன் விளைவாக இரத்த குழாய்களின் தசைகளை ஓய்வெடுக்க வைப்பதால், இதய விரிவாக்கம் மற்றும் இதயச் சுருக்க இரத்த அழுத்தமும் குறைந்து கட்டுப்பாட்டில் இருக்கும்.
கற்பூரவள்ளி:
கற்பூரவள்ளி இரத்தக் குழாய்களின் மெல்லிழைவான தசைகளை ஓய்வெடுக்க வைத்து, இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். மேலும் இது இதய துடிப்புகளை வலிமைப்படுத்தி, அழுத்தத்தின் வேகத்தை குறைக்க உதவுகிறது.
முருங்கைக் காய்:
முருங்கைக்காயில் அதிக அளவு புரதச்சத்து மற்றும் பெருமதிப்பு வாய்ந்த வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் போன்றவை நிறைந்துள்ளது. ஆய்வின் படி முருங்கை செடியின் இலைகளிலிருந்து எடுக்கும் சாற்றால், இதயம் விரியும் போது மற்றும் சுருங்கும் போது ஏற்படும் இரத்த அழுத்தம் குறைய வாய்ப்பு உண்டு என்று கூறுகிறது. இதன் பயனை அடைவதற்கு, முருங்கைக் காயை பருப்பு வகைகளோடு சமைத்து உண்ண வேண்டும்.
நெல்லிக்காய்:
நெல்லிக்காயும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. நெல்லிக்காயில் உள்ள VITAMIN C இரத்தக் குழாய்களை அகலப்படுத்த முக்கிய பங்கு வகிப்பதால், இரத்த அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது என்று நம்பப்படுகிறது.
முள்ளங்கி:
இந்திய சமையலறைகளில் பொதுவாக பயன்படுத்தும் காய்கறியில் முள்ளங்கியும் ஒன்று. அப்படிப்பட்ட முள்ளங்கியில் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கின்ற பொருட்கள் இருக்கின்றன. அதுவும் POTASSIUM அதிகமுள்ள முள்ளங்கி இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.
எள்:
நல்லெண்ணெய் மற்றும் அரிசி தவிட்டு எண்ணெய் கலந்த பண்டங்களை சாப்பிடுவதால், உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் இரத்த அழுத்தம் குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் மருந்துகள் சாப்பிடுவதை விட, இதை உபயோகித்தல் இன்னும் நல்ல பலன் கிடைக்கும் என்றும் ஆய்வு சொல்கிறது.
ஆளி விதை:
ஆளி விதையில் OMEGA -3 கொழுப்பு அமிலம் கொண்டுள்ள லினோலினிக் அமிலத்தின் கூட்டு வளமாக இருக்கிறது. பல ஆய்வுகளின் படி, ஆளி விதை சேர்த்த உணவை உட்கொண்டால், உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் குறைந்த அளவிலேயே இருக்கும். மேலும் இரத்த அழுத்தத்தையும் இது குறைக்க உதவும்.
ஏலக்காய்:
உயிர் வேதியியல் மற்றும் உயிர் இயற்பியலின் இந்திய குறிப்பேட்டின் ஆய்வறிக்கையின்படி, உயர் இரத்த அழுத்தம் உள்ள 20 நபர்களுக்கு தினமும் 3 கிராம் ஏலக்காய்ப் பொடி கொடுக்கப்பட்டது. மூன்று மாத முடிவில் அனைவருக்கும் பக்க விளைவு எதுவுமின்றி நல்ல ஆரோக்கியத்துடன் தேறினார்கள். மேலும் இரத்த அழுத்தமும் நன்றாக குறைந்து காணப்பட்டது.
வெங்காயம்:
வெங்காயத்தில் குவர்செட்டின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதால், அவை உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய நோய் மற்றும் வாதத்திலிருந்து காப்பாற்றும்.
லவங்கப்பட்டை:
லவங்கப்பட்டை இதய நோய்கள் தவிர சர்க்கரை நோயையும் தடுக்கும். ஓஹியோவிலுள்ள செயல்முறை உடல் நலம் அறிவியல் மையம் நடத்திய ஆய்வின்படி, 22 நபர்களில் 11 பேருக்கு தினமும் தண்ணீரில் லவங்கப்பட்டை பொடி 250 மி.கி. அளவில் கொடுக்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஆறுதல் மருந்து மட்டுமே அளிக்கப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் லவங்கப்பட்டை கலந்த தண்ணீர் அருந்தியவர்களுக்கு 13 முதல் 23 விழுக்காடு வரை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அளவு கூடியது. மேலும் உயர் இரத்த அழுத்தமும் நன்றாக குறைந்து காணப்பட்டது.