ரத்து செய்யப்பட்ட ரயில்கள் JUNE 20 முதல் மீண்டும் இயக்கம்..!!

 ரத்து செய்யப்பட்ட ரயில்கள் JUNE 20 முதல் மீண்டும் இயக்கம்..!!

பயணிகள் வரத்து குறைவால் ரத்து செய்யப்பட்ட ராக்போர்ட், உழவன் உள்ளிட்ட ரயில்கள் இன்று முதல் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே(Southern Railway) அறிவித்துள்ளது. தமிழகத்தில் Corona  இரண்டாம் அலை வேகமாக பரவியதால் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தததால், பல சிறப்பு ரயில்கள் மே மாதம் முதல் ரத்து செய்யப்பட்டது.

இந்த செய்தியும் படிங்க…

வீட்டை விட்டு வெளியே செல்வோர் தவறாமல் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்..!!  

 ஆனால், தமிழகத்தில் தற்போது Corona  தொற்றின் பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால், தமிழகத்தில்Lockdown-ல் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில், இன்று முதல் முதற்கட்டமாக 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே(Southern Railway) தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் இருந்து தஞ்சை, கொல்லம், ராமேஸ்வரம், திருச்சி உள்ளிட்ட ரயில்நிலையங்களுக்கு இரயில் இயக்கப்படுகிறது.

Leave a Comment