மோட்டார் வாகன ஆய்வாளர் : நேர்முகத் தேர்வை தள்ளி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

மோட்டார் வாகன ஆய்வாளர் : நேர்முகத் தேர்வை தள்ளி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!! 

தமிழ்நாட்டில் ஜூலை 19ஆம் தேதி நடைபெறவிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று TNPSC – க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 இந்த செய்தியையும் படிங்க…

 (ICFRE) நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

தமிழகத்தின் 113 மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க கோரி 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) அறிவித்துள்ளது. இந்த பணிக்கு 

எழுத்துத் தேர்வு,

 சான்றிதழ் சரிபார்ப்பு 

மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் 

என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 1,328 பேர் பங்கேற்ற நிலையில் 33 பேரை மட்டுமே நேர்முகத் தேர்வுக்காக அழைத்திருந்தது.

 இந்த செய்தியையும் படிங்க…

தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி:5 சவரன் நகை கடன் தள்ளுபடி – தமிழக பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு..??

 இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்த நிலையில். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் மோட்டார் வாகன ஆய்வாளர் பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தக்கூடாது என உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை ஜூலை 19ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Leave a Comment