மேல்நிலைப் பள்ளிகள் & கல்லூரி மாணவர்களுக்கு விரைவில் இலவச டேப்லெட்-அமைச்சர்..!!

 மேல்நிலைப் பள்ளிகள் & கல்லூரி மாணவர்களுக்கு விரைவில் இலவச டேப்லெட்-அமைச்சர்..!!

‘தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில், அரசு செலவில் 4G மற்றும் 5G இணையதள இணைப்புடன் டேப்லெட் வழங்கப்படும். அத்துடன், அனைத்துக் கல்வி நிலையங்களிலும் வைஃபை வசதி செய்து கொடுக்கப்படும்’ என்று, DMK  தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.

இந்த செய்தியும் படிங்க…  

அதிர்ச்சி.! 30 லட்சம்  IT ஊழியர்கள் வேலை இழப்பார்கள்..!!  

இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அப்போது அவர், “10th முடித்த அனைவருக்கும் தேர்ச்சி என்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பெற்றோரிடமிருந்து வரக்கூடிய கருத்துக்கள் குறித்து ஆலோசனை செய்து வருகிறோம்.

பள்ளிகளில் கூடுதல் கட்டணம் தொடர்பாக புகார் அளிப்பதற்கும், பாலியல் தொடர்பான புகார் அளிப்பதற்கும் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள அதே எண்ணில் தொடர்பு கொண்டோ, E-Mail மூலமாகவோ பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.10, PLUS TWO மாணவர்களுக்கு விரைவில் டேப்லெட் வழங்கப்படும்” என்று கூறினார்.

Leave a Comment