மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு..!! - Tamil Crowd (Health Care)

மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு..!!

  மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு..!!

டில்லியில் மே 3ம் தேதி வரை முழு ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.டில்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. 

இந்த செய்தியையும் படிங்க…

இன்று முழு ஊரடங்கு: என்னென்ன இயங்கும்..?? என்னென்ன இயங்காது..?? 

டில்லியில் கடந்த வாரம் 6 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் டில்லியில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

அங்கு தற்போது 93 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்து முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். அதாவது மே 3-ம் தேதி காலை 5 மணி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் புதிதாக இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க….

42 ஆயிரத்தில்(42,000/-), -சென்னை தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை: தேர்வு கிடையாது..!! 

 இதில் ஆக்சிஜன் உற்பத்தியாளர்கள், விநியோகம் செய்வோர், ஆக்சிஜன் விநியோகத்தை சிறப்பாக கையாளும் மருத்துவமனைகள் ஆகியவற்றின் விவரங்கள் இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒருமுறை தகவல்கள் அப்டேட் செய்யப்படும். இதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்படும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Leave a Comment