மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு : தமிழ்நாட்டில் எதற்கெல்லாம் அனுமதியில்லை..!!

மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு : தமிழ்நாட்டில் எதற்கெல்லாம் அனுமதியில்லை..!!

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகளுடன் புதிய கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் நடைமுறையிலிருந்த ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில் நோய்த்தொற்று வெகுவாக குறைந்துள்ளது .

 இந்த செய்தியையும் படிங்க…

 “இதையெல்லாம் செய்தாலே கொரோனா நம்மை அண்டாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்..!!

கொரோனா தொற்று குறைந்த போதிலும் நோய் பரவலை கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் வருகின்ற 15ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது.

  1. இதில் டாஸ்மாக் கடைகள், நகைக் கடைகள், துணிக்கடைகள், மளிகை கடைகள் ,நகைக் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
  2. அதே போல் அனைத்து மாவட்டத்திற்கும், பொதுப்போக்குவரத்து 50% பயணிகளுடன் தொடங்கப்பட்டுள்ளது. 
  3. அதே போல் அனைத்து மாவட்டங்களிலும் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  4. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்துக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
  5. மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் தவிர சர்வதேச விமான போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. 
  6. திரையரங்குகள் ,அனைத்து மதுக்கூடங்கள் ,நீச்சல் குளங்கள் ,பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமுதாயம் ,அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு விளையாட்டு ,கலாசார நிகழ்வுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  7.  நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 
  8.  இறுதி சடங்குகளில் 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்

 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த செய்தியையும் படிங்க…

 எச்சரிக்கை:கொரோனா 3ஆவது அலை: அக்டோபா்-நவம்பரில் உச்சத்தில் இருக்கும்..!! 

Leave a Comment