முதல்வர்-வீடு திரும்பினார்..!! - Tamil Crowd (Health Care)

முதல்வர்-வீடு திரும்பினார்..!!

முதல்வர்-வீடு திரும்பினார்..!!

குடலிறக்க சிகிச்சை முடிந்து முதல்வர் வீடு திரும்பினார் .

குடலிறக்க சிகிச்சைக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, முதல்வர் இ.பி.எஸ்., சிகிச்சை முடிந்து, நேற்று வீடு திரும்பினார்.சட்டசபை தேர்தலையொட்டி, முதல்வர் இ.பி.எஸ்., தமிழகம் முழுதும், வாகனத்தில் சுற்றுப்பயணம் செய்து, தேர்தல் பிரசாரம் செய்தார். கடந்த, 6ம் தேதி ஓட்டுப்பதிவு முடிந்தது.இந்நிலையில், கொரோனா நோய் பரவலை தடுக்க, தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இம்மாதம், 18ம் தேதி, தலைமை செயலர் மற்றும் அதிகாரிகளுடன், முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த செய்தியையும் படிங்க…

2 நாட்கள் முழு ஊரடங்கு – அதிரடி அறிவிப்பு !! 

அன்று மதியம், குடலிறக்க பிரச்னைக்காக, சென்னை, அமைந்தகரையில் உள்ள, தனியார் மருத்துவமனைக்கு முதல்வர் சென்றார். குடலிறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ள, டாக்டர்கள் அறிவுறுத்தினர்.கொரோனா பரிசோதனையில், தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.சிகிச்சை முடிந்து, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று காலை வீடு திரும்பினார். வீட்டில் மூன்று நாட்கள், முழு ஓய்வில் இருக்கும்படி, மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Leave a Comment