முதலமைச்சர் ஸ்டாலின்: தகவல் தொழில்நுட்பத் துறையில்-அதிரடித் திட்டங்கள்!! - Tamil Crowd (Health Care)

முதலமைச்சர் ஸ்டாலின்: தகவல் தொழில்நுட்பத் துறையில்-அதிரடித் திட்டங்கள்!!

 முதலமைச்சர் ஸ்டாலின்: தகவல் தொழில்நுட்பத் துறையில்-அதிரடித் திட்டங்கள்!!

கலைஞர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாட்டின் அனைத்து மாநகரங்களிலும் IT பார்க்குகள் தொடங்கப்பட்டன. அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் இந்த IT பார்க்குகளுக்கு அதிக கவனம் செலுத்தாத நிலையில், எதிர்பார்த்த பயன்கள் கிடைக்கவில்லை.

இந்தச் செய்தியையும் படிங்க…

தனியார் ஆம்புலன்ஸ் கட்டணம் சேவை – அரசாணை வெளியீடு..!!  

கணிணித்துறையில் கல்வி பயின்ற இளைஞர்கள் சென்னை, பெங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட பெரு நகரங்களை மட்டுமே வேலைவாய்ப்புக்காக நம்பியிருந்ததை மாற்றுவதற்காகவே மாநகராட்சி தோறும் IT பார்க்குகள் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார் கலைஞர் கருணாநிதி. 

இடைப்பட்ட 10 ஆண்டுகால ஆட்சியில் IT துறையின் வளர்ச்சியை முழுமையாக தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை கவனத்தில் கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், புதிய திட்டங்கள் செயல்படுட்துவதற்காக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரை முடுக்கி விட்டுள்ளார்.

ஊரகப் பகுதியில் கணிணித்துறை வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பாக IT துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வுப் பணிகளை தொடங்கியுள்ளார். முதல்கட்டமாக தென்காசி அருகே ஒரு கிராமத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் சோஹோ கணிணி நிறுவனத்திற்குச் சென்று அந்தக் கம்பெனியின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்புடன் நிறுவன செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

அடுத்ததாக திருநெல்வேலியை அடுத்துள்ள கங்கைகொண்டான் IT பார்க்குக்குச் சென்று நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் அமைச்சர் மனோ தங்கராஜ். ஊரகப் பகுதி இளைஞர்களுக்கு கணிணித்துறையில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது குறித்து திட்டங்கள் தயாரித்து முதலமைச்சரின் ஒப்புதலுக்குப் பிறகு விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது.

சோஹோ தனியார் கம்பெனியின் வெற்றி ரகசியம், மாநகராட்சிகளில் செயல்பட்டு வரும் IT  நிறுவனங்களின் செயல்பாடுகள், நிறை குறைகள் பற்றி ஆராய்ந்து ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி ஊரகப் பகுதிகளுக்கும் IT துறையின் வளர்ச்சியைக் கொண்டு செல்வது குறித்தான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

இந்தச் செய்தியையும் படிங்க…

 சிறார் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கம்:தமிழகத்தில் உதயமானது..!!  

முதலமைச்சர் ஸ்டாலின் கிராமப்புற வளர்ச்சியில் அதீத அக்கறை எடுத்து வருவது தமிழ்நாடு தன்னிறைவு அடைவதற்கும் கூடுதல் வளர்ச்சிக்கும் வழி வகுக்கும் என்பது  நிச்சயம்.

Leave a Comment