முக்கிய செய்தி:7th Pay Commission: NVS ஊழியர்களின் medical reimbursement 5 மடங்கு அதிகரிப்பு..!! - Tamil Crowd (Health Care)

முக்கிய செய்தி:7th Pay Commission: NVS ஊழியர்களின் medical reimbursement 5 மடங்கு அதிகரிப்பு..!!

 முக்கிய செய்தி:7th Pay Commission: NVS ஊழியர்களின் medical reimbursement 5 மடங்கு அதிகரிப்பு..!!

7th Pay Commission: 7 வது ஊதியக்குழுவின் ஒரு பகுதியாக 52 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்கள் JULY 1 முதல் அதிகரித்த அகவிலைப்படி(DA)யைப் பெறத் தயாராக உள்ளனர். ஊழியர்களுக்கு அவர்களின் (DA) நிலுவைத் தொகையும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான (Central Government Employees) மற்றொரு நல்ல செய்தியாக, நவோதயா வித்யாலயா பள்ளியில் (NVS) பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவலைப்படியுடன் மருத்துவ கிளெய்மையும் (Medical Claim) அரசாங்கம் அதிகரித்துள்ளது.

மருத்துவ சிகிச்சைக்கான தொகை அதிகரித்துள்ளது:

நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளின் ஊழியர்களின் ( NVS Employees) மருத்துவ சிகிச்சைக்கான கிளெயிம் தொகையின் ( Medical reimbursement) வரம்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது. கல்வி அமைச்சகத்தின் உதவியுடன் செயல்படும் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, மருத்துவ சிகிச்சைக்கான கிளெயிம் தொகையின் அளவு ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று ஒரு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது.

ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு அன்றாட நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருத்துவ சிகிச்சை செலவுகளின் வரம்புகளில் திருத்தம் செய்ய நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளின் ஆணையர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்தச் செய்தியையும் படிங்க…  

AADHAAR – PAN இணைப்பு: JUNE 30 கடைசி தேதி..!!  

நவோதயா வித்யாலயா சமிதி பள்ளி ஊழியர்களின் மருத்துவ சிகிச்சை தொகைக்கான வரம்பு ஆண்டுக்கு 5000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக சுற்றறிக்கை தெரிவிக்கிறது. சுற்றறிக்கையில், “அரசு அல்லது சிஜிஹெச்எஸ் (CGHS)அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டால், மருத்துவ சிகிச்சைக்கான செலவுக்கான தொகையின் வரம்பு தற்போதுள்ள 5,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது தொகையின் அளவு ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

AMA சிகிச்சைக்கான மருத்துவ சிகிச்சைத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

AMA (மருத்துவ ஆலோசனைக்கு ஏற்ப செய்யப்படுவது) சிகிச்சைக்கான மருத்துவ தொகையின் வரம்பையும் மத்திய அரசு திருத்தியுள்ளது. நவோதயா வித்யாலயா பள்ளியின் ஊழியர்களுக்கு இப்போது ரூ .5000 க்கு பதிலாக ரூ .15,000 கிடைக்கும்.

ஒரு நோயாளி மருத்துவரை அணுகாமல் டிஸ்சார்ஜ் ஆனால் அந்த சூழ்நிலைகளில் AMA பயன்படுத்தப்படுகிறது. நவோதயா வித்யாலயா பள்ளியின் ஊழியர்களுக்கான மீதமுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் கூடுதல் மாற்றம் வெறெதுவும் இல்லை.

Leave a Comment