மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு-அவசர கடிதம்..!!

 மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு-அவசர கடிதம்..!!

கொரோனாவால் இறந்த நோயாளிகளுக்கு இறப்பு மற்றும் சட்ட வாரிசு சான்றிதளை தாமதமின்றி வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த செய்தியும் படிங்க…

வீட்டை விட்டு வெளியே செல்வோர் தவறாமல் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்..!!  

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ CORONA நோயாளிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது நோயாளிகளின் பெயர், முகவரி, வயது மற்றும் பிற விவரங்களை முறையாக பதிவேற்றப்படுவதில்லை. இதனால் நோயாளிகள் இறக்க நேரிடும் போது மரண சான்றிதழ்கள் மற்றும் சட்ட வாரிசு சான்றிதழ்களைப் பெறுவதற்கு உறவினர்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாவதாக அரசின் கவனத்துக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக அரசு பலமுறை அறிவுறுத்தியும் முறையாக பின்பற்றப்படுவதில்லை. எனவே, இந்த விஷயத்தை தனிப்பட்ட முறையில் ஆராய்ந்து, இறந்தவரின் சரியான விவரங்களை பதிவேற்றும்படி மருத்துவமனை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தவும், இறப்பு மற்றும் சட்ட வாரிசு சான்றிதளை தாமதமின்றி வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கவும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Leave a Comment