மாம்பழம் சாப்பிட்ட பிறகு கூடவே -சில உணவுகளை சாப்பிடக்கூடாது..!!

 மாம்பழம் சாப்பிட்ட பிறகு கூடவே  -சில உணவுகளை சாப்பிடக்கூடாது..!! 

இந்தியாவில் பங்கனபள்ளி, அல்போன்சா, படாமி, சிந்தூரா, தோடாபுரி, மல்கோவா என பல்வேறு வகையான மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகிலேயே மாம்பழங்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதும் இந்தியா தான். எனவே கோடையில் இந்தியாவில் பல இடங்களிலும் மாம்பழங்கள் மலிவாக விற்கப்படும்.

 இந்தச் செய்தியையும் படிங்க…

 நரம்பு மண்டல செல்களை பாதிக்கும் Cancer Virus: ஆய்வில் தகவல்..!!  

இதன் காரணமாக பலரும் கோடை காலங்களில் மார்க்கெட்டுக்கு சென்றால் கிலோ கணக்கில் மாம்பழங்களை தங்கள் வீடுகளுக்கு வாங்கி செல்வார்கள். மாங்கனி சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். என்னதான் நன்மைகள் இருந்தாலும் அளவோடு சாப்பிடுவது நல்லது. அதே போல மாம்பழத்தை சாப்பிட்ட பிறகு சில உணவுகளை சாப்பிட்டால் சில உடல்நல பிரச்சினைகளும் ஏற்படக்கூடும். எது என்னென்ன உணவுகள் என்னென்ன மாதிரியான உடல்நல பிரச்சினைகள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தண்ணீர் குடிக்கக்கூடாது:

மாம்பழம் சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கக்கூடாது.  மாம்பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில் மாம்பழம் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பது உடலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். வயிற்று வலி, நெஞ்சுக்கரிப்பு மற்றும் செரிமானமின்மை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். மாம்பழம் சாப்பிட்ட பிறகு குறைந்தது அரை மணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பது நல்லது.

தயிர்:

தயிரும் நல்லதுதான் மாம்பழமும் நல்லதுதான். ஏன் தயிரில் மாம்பழ துண்டுகளைச் சேர்த்தும் கூட பலரும் சாப்பிடுவார்கள். ஆனால் தயிர் குளிர்ச்சி என்பதாலும் மாம்பழம் சூடு என்பதாலும் இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிட்டால் வெப்பமுயும் குளிரும் ஒரு சேர சமாளிக்க உடலுக்கு கடினமாகிவிடும். இதனால் தோல் சார்ந்த பிரச்சினைகள், உடலில் நச்சு தேக்கம் போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும். எனவே தயிர் மாம்பழம் இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவதைத் தவிர்த்து விட வேண்டும்.

 பாகற்காய் :

மாம்பழத்தை சாப்பிட்ட பாகற்காய் சாப்பிடுவது குமட்டல், வாந்தி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதால் மாம்பழம் சாப்பிட்ட பிறகு பாகாற்காய் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

காரமான உணவுகள்:

மாம்பழத்தை சாப்பிட்ட பிறகு மிளகாய் அல்லது காரமான உணவுகள் சாப்பிட வேண்டாம். ஏனெனில் இது வயிற்றுப் பிரச்சினைகளை ஏற்படுத்தி சருமத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் முகப்பரு பிரச்சினைகளும் ஏற்படக்கூடும்.

 இந்தச் செய்தியையும் படிங்க…

CORONA : தடுப்பூசி கட்டாயம் தேவையா..??தடுப்பூசியின் பயன் தான் என்ன?  

குளிர்பானம்:

மாம்பழம் சாப்பிடும்போது குளிர்பானம் குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். மாம்பழங்களில் சர்க்கரை அதிகம் இருப்பதால், கூடவே சர்க்கரை உள்ள குளிர்பானங்களை உடனடியாக குடிப்பதால் நீரிழிவு நோயாளிகளில் இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்கும். மற்றவர்களும் கூட தவிர்த்துவிடுவது நல்லது.

Leave a Comment