‘மாநகராட்சி பணிகள் மற்றும் சேவைகள், வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும்’-IAS. அதிகாரி..!!
திருப்பூர் மாநகராட்சியின் புதிய கமிஷனராக IAS. அதிகாரி கிராந்தி குமார் நேற்று பொறுப்பேற்றார்; ‘மாநகராட்சி பணிகள் மற்றும் சேவைகள், வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும்’ என்று உறுதி கூறினார்.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த IAS., அதிகாரி கிராந்தி குமார், திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார்.திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பதவி IAS., அதிகாரியாக தரம் உயர்த்தப்பட்டு, முதல் கமிஷனராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.நேற்று காலை கிராந்தி குமார் மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்றார்.
இந்த செய்தியையும் படிங்க…
8 மாவட்ட கலெக்டர்கள் உட்பட 20 IAS அதிகாரிகள் மாற்றம்: தலைமை செயலர் இறையன்பு ..!!
கிராந்தி குமார் கூறியதாவது:
மாநகராட்சி பகுதியில் CORONA தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் ஒத்துழைப்புடன் சீரிய முறையில் மேற்கொள்ளப்படும். இப்பணிக்கு முன்னுரிமை அளித்து தெளிவான முறையில் மேற்கொள்ளப்படும்.திருப்பூரில் உள்ள 60 வார்டுகளிலும் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் உரிய வகையில் ஏற்படுத்தப்படும். இதுகுறித்த பொதுமக்கள் தரப்பு தேவைகள், குறைகள் கண்டறிந்து தீர்வு காணப்படும்.அனைத்து வகையிலும் மாநகராட்சியின் சேவை மற்றும் பணிகள் முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடனும், மக்கள் நலன் சார்ந்தும், விதிமுறைகளுக்கு உட்பட்டும் மேற்கொள்ளப்படும். மாநகராட்சி நிர்வாகத்துடன் அனைத்து தரப்பினரும் உரிய வகையில் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.