மாதம் ரூ.63,200/-வரை சம்பளம்; Central Government Jobs..!!
தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை செயலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.0220/21
பணி: இளநிலை செயலக உதவியாளர்(பொது)
காலியிடங்கள்: 05
பணி: இளநிலை செயலக உதவியாளர்(நிதி)
காலியிடங்கள்: 03
பணி: இளநிலை செயலக உதவியாளர்(பண்டக மற்றும் கொள்முதல்)
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,900 – 63,200
தகுதி: (+2) Pass; ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். நிதி பிரிவு பணிக்கு மட்டும் கணக்கியல் துறையில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தட்டச்சு தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Director, CSIR-National Botanical Research Institute, Lucknow என்ற டி.டியாக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nbri.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான அனைத்து நகல் சான்றிதழ்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Controller of Administration,
CSIR-NBRI RanaPratap Marg,
Lucknow-225 001.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.09.2021
மேலும் விவரங்கள் அறிய https://nbri.res.in/media/Advt.-JSA-02-2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.