மாதம் ரூ.1,77,500 வரை சம்பளம்/- : மத்திய அரசு வேலை..!!
இந்திய ராணுவத்தில் நிரப்பப்பட உள்ள 191 பணியிடங்களுக்ககு திருமணமாகாத ஆண் மற்றும் பெண் பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 27.10.2021க்குள் வரவேற்கப்படுகின்றன.
ராணுவம் சார்பில் இன்ஜினியரிங் பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 191
மத்திய அரசு அமைப்பு: இந்திய ராணுவம்
பணி: Officer (SSC Entry)
1. SSC (Tech) – Male – 175
2. 2. SSC (Tech) – Female – 14
வயதுவரம்பு:
1 அக்டோபர் 2022 தேதியின்படி, 20 முதல் 27 வயதிற்குள் இருப்பவர்கள் SSC (Tech) , SSC (Tech) பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Widows of Defense Personnel – 02 பணிக்கு மட்டும் வயதுவரம்பு, 1 அக்டோபர் 2022 தேதியின்படி, 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
படிப்பு:
SSC (Tech) , SSC (Tech) பணிக்கு பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதியம்: மாதம் ரூ.56,100 – ரூ.1,77,500
எப்படி விண்ணப்பிக்கலாம்?
SSC (Tech) , SSC (Tech) பணிக்கு https://www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் முதலில் பதிவு செய்துவிட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களுடன், புகைப்பட நகல்களை கட்டாயம் இணைக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.10.2021.