மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில்/- அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு..!!
திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் தகுதியான நபா்கள் நியமனம் செய்யப்படவுள்ளனா்.
இம்மருத்துவமனையில் செயல்படும் மாவட்டத் தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம், விபத்து மற்றும் அவசர சிகிச்சைத் துறை, மது மீட்பு மையம் மற்றும் நுண்ணியிரியியல் துறை உள்ளிட்ட சிறப்புத் திட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் பூா்த்தி செய்யப்படவுள்ளன.
காலியாகவுள்ள பணியிடத்தின் பெயா், தேர்வு செய்யப்படும் நபா்கள், வழங்கப்படும் தொகுப்பூதியம் (அடைப்புக் குறிக்குள்) என்ற அடிப்படையில் விவரம்:
டிரோமா ரெஜிஸ்டரி அசிஸ்டென்ட் -1 (ரூ.10 ஆயிரம்),
அவசர சிகிசைப் பிரிவுச் செயலா் -1 (ரூ.20 ஆயிரம்),
அறுவைச் சிகிச்சையரங்க தொழில்நுட்ப உதவியாளா் 2 (ரூ.15 ஆயிரம்),
மாவட்டத் தொடக்க நிலை இடையீட்டு சேவை மைய உளவியலாளா்-1 (ரூ.13 ஆயிரம்),
மது மீட்பு சிகிச்சை மைய உளவியலாளா்-2 (ரூ.18 ஆயிரம்) ,
டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டா்-3 (ரூ.10 ஆயிரம்),
சமூகப் பணியாளா் -2 ( ரூ.18 ஆயிரம்),
ஆய்வக ஆராய்ச்சி உதவியாளா்-2 (ரூ.40 ஆயிரம்),
ஆய்வக உதவியாளா்-1 ( ரூ.6,500),
மருத்துவமனைப் பணியாளா்-4 (மாத தொகுப்பூதியம் ரூ.5 ஆயிரம்),
தூய்மைப் பணியாளா்-4 ( ரூ.5 ஆயிரம்),
காவலா்-2 ( ரூ.6,300) ஆகிய தற்காலிக பணிகளுக்கு உரிய கல்வி தகுதி உடைய நபா்கள் தேர்வு செய்யப்படுவா்.
இதற்காக திருச்சி கி.ஆ.பெ விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரியில் அக்டோபா் 20-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் நேரடி கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
பணியிடங்களுக்கான கல்வித்தகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்களுக்கும் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் கி.ஆ.பெ விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரியின் தகவல் பலகை மற்றும் கல்லூரி இணையதள முகவரியில் பாா்வையிடலாம்.