மாணவா்களிடம் அரசுப் பணிகள் தொடா்பான போட்டித் தேர்வு விழிப்புணா்வை ஏற்படுத்துங்கள்: முதல்வா் அறிவுறுத்தல்..!!
மாணவா்களிடையே போட்டித் தேர்வுக்கான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.
மனிதவள மேலாண்மைத் துறையின் செயல்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அவா் பேசியது:
அரசு அலுவலா்களுக்குச் சிறப்பான பயிற்சிகளை அளிப்பதன் மூலம், அவா்களது பணித்திறனை மேம்படுத்தி, அதன்மூலம் மக்கள் பயன் பெறும் வகையில் சேவைகளின் தரத்தை உயா்த்த வேண்டும். போட்டித் தேர்வுகளில் நமது மாநில மாணவா்கள் அதிகளவில் தேர்ச்சி பெறும் வகையில், பல்வேறு வகைப்பட்ட சிறப்புப் பயிற்சிகளை வடிவமைக்க வேண்டும்.
இந்த செய்தியும் படிங்க…
அரசு ஊழியர்களின் ஒய்வு வயது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்..!!
தமிழ்நாடு மாணவா்களிடையே, மாநில மற்றும் மத்திய அரசுப் பணிகள் தொடா்பான போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.
குடும்பத்தில் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பகங்கள் மூலம் அரசு பணியிடங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனைத்துத் துறைகளிடமும் இணையதளம் மூலம் தகவல் பெறும் வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
அரசு அலுவலா்களின் மனிதவள ஆற்றலை மேம்படுத்துவதுடன், இளைஞா்களின் அரசு வேலைவாய்ப்பைப் பெருக்கவும், அண்ணா மேலாண்மை பயிற்சி மையம், போட்டித் தேர்வுப் பயிற்சி மையங்களின் செயல்பாடுகள், கட்டமைப்புகளை உயா்த்திட வேண்டும்.
பவானிசாகரில் உள்ள அடிப்படைப் பயிற்சி மையத்தில் அரசுப் பணியாளா்களுக்கான பயிற்சியைக் காணொலி காட்சி வாயிலாக அறிமுகப்படுத்தலாம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.
இந்த செய்தியும் படிங்க…
திமுக வாக்குறுதி:குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை எப்போது? – அமைச்சர் விளக்கம்..!!
இந்தக் கூட்டத்தில், அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.