மளிகை தொகுப்புடன் ரூ.2,000; ரேஷனில் JUNE 15 முதல் வினியோகம்..!!
Ration கடைகளில், அரிசி கார்டுதாரர்களுக்கான CORONA நிவாரண தொகையின் இரண்டாவது தவணையான, தலா 2,000 ரூபாயும், 14 வகை பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பும், இன்று (JUNE 15) முதல் வினியோகம் செய்யப்பட உள்ளன.
முதல்வர் ஸ்டாலின், 2.09 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக, தலா 4,000 ரூபாய் வழங்க, மே மாதம் உத்தரவிட்டார். முதல் தவணையான, தலா 2,000 ரூபாய் வழங்கும் பணி, MAY 15 முதல், ரேஷன் கடைகளில் துவங்கியது. அம்மாதம் நிவாரண தொகை வாங்காதவர்கள், இம்மாதம் வாங்கி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை 2.40 லட்சம் பேர் மட்டுமே முதல் தவணையை வாங்காமல் உள்ளனர்.நிவாரண தொகையின் இரண்டாவது தவணையான, தலா 2,000 ரூபாயுடன், கோதுமை மாவு உள்ளிட்ட, 14 வகை பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு, இன்றுமுதல் வழங்கப்பட உள்ளது.
இந்தச் செய்தியையும் படிங்க…
சிறார் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கம்:தமிழகத்தில் உதயமானது..!!
அவற்றை வாங்க எந்த தேதி, நேரத்தில், Ration கடைகளுக்கு வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய டோக்கனை, கார்டுதாரர்களின் வீடுகளில் இம்மாதம் 11ம் தேதி முதல், நேற்று வரை ரேஷன் ஊழியர்கள் வழங்கினர்.நிவாரண தொகையை, மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட வாரியாக பிரித்து, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் கணக்குகளில் செலுத்தியுள்ளது. அந்த தொகையை ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்கள் எடுத்து, தயார் நிலையில் வைத்துள்ளன.
மேலும், ரேஷன் கடைகளுக்கு, மளிகை தொகுப்பும் அனுப்பப்பட்டு தயாராக வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு, தலா 2,000 ரூபாயுடன், மளிகை தொகுப்பு வழங்கும் பணி, இன்று காலை துவங்குகிறது. ஒவ்வொரு கடையிலும் தினமும் 200 கார்டுதாரர்களுக்கு குறையாமல் வழங்கப்பட உள்ளது.
‘எடை குறைவாக சப்ளை’இது குறித்து ரேஷன் ஊழியர்கள் கூறியதாவது:
அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளுக்கு ‘சப்ளை’ செய்யும் பணியை, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் மேற்கொள்கிறது. அரிசி, சர்க்கரை போன்றவை மூட்டைக்கு 2 கிலோ வரை குறைவாகவே சப்ளை செய்யப்படுகிறது.
அந்த இழப்பை ஈடுகட்டவே, சில ஊழியர்கள், கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கும் போது எடையில் தில்லுமுல்லு செய்கின்றனர்.சரியான எடையில் வழங்குமாறு, வாணிப கழக அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை. தற்போது, மளிகை தொகுப்பும் மூட்டைக்கு 3 கிலோ முதல், 4 கிலோ வரை எடை குறைவாக சப்ளை செய்யப்படுகிறது.
இந்தச் செய்தியையும் படிங்க…
மக்களின் நலன் கருதி CORONA கட்டுப்பாடுகளை தொடர வேண்டும்: உயர் நீதிமன்றம்..!!
இதனால், அவற்றை கார்டுதாரர்களுக்கும் குறைத்து வழங்க நேரிடும். இழப்பு தொகையை ஊழியர்கள் ஏற்கும் நிலை ஏற்படும். எனவே, ஒவ்வொரு கடையிலும் ஊழியர்கள் முன்னிலையில், மளிகை தொகுப்பை சரியாக எடைபோட்டு வழங்க, அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.