மருத்துவக் குறிப்புகள்: முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க….

 மருத்துவக் குறிப்புகள்: முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க….

நகச்சுற்று குணமாக:

  • சிறிது மருதாணி இலைகளுடன் சிறிது படிகார உப்பைச் சேர்த்து விழுது போல் அரைத்து நகச்சுற்று இருக்கும் நகத்தில் மருதாணி இடுவது போல் வைத்தால் நகச்சுற்று குணமாகும்.

வெள்ளைப்படு நோய் குணமாக:

  • வேலமரத்தின் விதை பிடிக்காத இளம் பிஞ்சுகளை 500 கிராம் எடுத்து,காய வைத்து இடித்து பொடியாக்கி 2 கிராம் அளவு தினம் இருவேளையும் பாலுடன் உணவுக்குப் பின் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

கரும்புள்ளிகள் மறைய:

  • முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க முள்ளங்கியை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு மோரைக் கலந்து அந்தக் கலவையை முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மீது தடவி வந்தால் கரும்புள்ளிகள் விரைவில் மறையும்.

நீர்க்கடுப்பு குணமாக:

  • கீழாநெல்லி இலைகளையும், கற்கண்டும் சம அளவு சேர்த்து அரைத்து கோலிக்குண்டு அளவு எடுத்துக் கொண்டு காலை, மாலை இரு வேளையும் 2-நாட்கள் உட்கொண்டால் நீர்க்கடுப்பு குணமாகும்.

தலைமுடி மின்ன:

  • தலையில் புளித்த மோரைத் தடவிக் கொண்டு அரைமணி நேரம் கழித்து குளித்தால் தலைமுடி நன்கு மின்னுவதுடன், நன்கு துவளும்.
  • வெந்தயத்தை தயிரோடு அரைத்து சேர்த்து குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Leave a Comment