மத்திய அமைச்சர்கள் அனைவருக்கும்- முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!
பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து பிறகு சென்னை திரும்பியுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் அனைத்து அமைச்சர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தமிழ்நாட்டுக்கான வளர்ச்சி திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த செய்தியும் படிங்க…
தமிழகத்தை அதிகம் பாதித்த DELTA CORONAVIRUS – சுகாதாரத்துறை தகவல்..!!
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு உடனடியாக தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடருக்காக சென்னை திரும்பியதால், மத்திய அரசின் அமைச்சர்களை சந்திக்க இயலவில்லை என அந்தக் கடிதத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் அரசின் அனைத்து அமைச்சர்களுக்கும் இத்தகைய கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என மூத்த அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை JUNE 21 திங்கட்கிழமை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் அமைச்சர்களை நேரில் சந்திக்க, மீண்டும் தான் டெல்லிக்கு பயணம் செய்ய உள்ளதாகவும் இந்தக் கடிதங்களில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சென்ற வியாழக்கிழமை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், வெள்ளிக்கிழமையன்று சென்னை திரும்பினார். டெல்லி விமான நிலையம் செல்வதற்கு முன்பு அவர் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்தார். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று சொல்லப்படும் இந்த சந்திப்பில் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக முதல்வர்கள் டெல்லி பயணத்தின்போது, பிரதமரை தவிர மத்திய அரசின் அமைச்சர்களையும் சந்திப்பது வாடிக்கை. ஆனால் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் எந்த மத்திய அமைச்சரையும் சந்திக்காத நிலையில், தற்போது அவர்கள் அனைவருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதங்களில் பிரதமருடனான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சிகரமானது என்று குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதல்வர், இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் அனைத்துக்கும் ஒத்துழைப்பு கிட்டும் என உறுதி அளிக்கும் வகையில் இருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த ஸ்டாலின், தமிழக அரசு சார்பாக 25 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்திருந்தார். நிலுவையில் உள்ள தமிழகத்துக்கான நிதியை விரைந்து விடுவிப்பது மற்றும் தமிழ்நாட்டுக்கு கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்குவது போன்ற பல்வேறு கோரிக்கைகள் மனுவில் இடம்பெற்றிருந்தன.
ஆகவே, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவைக் கூட்டத் தொடருக்கு பிறகு மீண்டும் டெல்லி பயணம் செய்து மத்திய அரசின் முக்கிய அமைச்சர்களை சந்திப்பார் என அதிகாரிகள் கருதுகிறார்கள். பிரதமரை சந்தித்து தமிழ்நாடு முதல்வர் சென்னை திரும்பிய பிறகு அவர் ஏன் மத்திய அரசின் அமைச்சர்களில் ஒருவரைக்கூட சந்திக்கவில்லை என்று கேள்வி எழுந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் அனைத்து அமைச்சர்களுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த செய்தியும் படிங்க..
.LOCKDOWN நீட்டிப்பு:11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் இல்லை..!!
தமிழ்நாடு முதல்வரின் டெல்லி பயணத்தின்போது DMK நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழக அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் டெல்லியில் அவரை வரவேற்று ஆலோசனை நடத்தினார்கள்.