மதிய உணவில் வாழைப்பழம்- முதல்வரிடம் அறிக்கை சமர்பிப்பேன்:அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
திருச்சி மண்ணச்சநல்லூரில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளியில் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அப்போது, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, MLA கதிரவன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கினர்.
இந்த செய்தியையும் படிங்க…
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், 100% கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். தகவல் கூற சிலர் தயக்கம் காட்டுகின்றனர், பெற்றோர்கள் புகார் கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும், வாழை விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்கும் வகையில் மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம் சேர்ப்பது குறித்து முதல்வரிடம் அறிக்கை சமர்பிப்பேன் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியையும் படிங்க…
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்..!!
கிராமப்புற பள்ளிகளில் கல்வி பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கு தேவையான குடிநீரை பள்ளி வளாக பைப்புகளிலிருந்து ஓரிரு மாணவ, மாணவிகள் எடுத்து செல்வதனை தவிர்க்கவும், அதற்கான பணியாளர்களை நியமிப்பது உள்ளிட்டவைகளும் இடம்பெறும் எனக் கூறினார்.