மக்களே உஷார்-தமிழகத்தில் 30 மணி நேரம் தொடர் ஊரடங்கு..!! - Tamil Crowd (Health Care)

மக்களே உஷார்-தமிழகத்தில் 30 மணி நேரம் தொடர் ஊரடங்கு..!!

 மக்களே உஷார்-தமிழகத்தில் 30 மணி நேரம் தொடர் ஊரடங்கு..!! 

தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு படியாக வாரவாரம் ஞாயிற்றுக்கிழமைகளில்  முழுநேர ஊரடங்கும், இரவு நேர ஊரடங்கு தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க….

ஏப்ரல் 22 முதல் மே 31 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை..!! 

நாளை இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை காலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். நாளை இரவு 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கும் அதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை முழுநேர ஊரடங்கும் அமலுக்கு வருகிறது.

இந்த முழு  ஊரடங்கு போது அவசர தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வரவேண்டும். தேவையில்லாமல் யாராவது வெளியே சுற்றினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க….

மத்திய அரசு ஊழியர்களுக்கு -28% அகவிலைப்படி..?? 

நாளை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 30 மணி நேரம் தொடர்ச்சியாக பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலை இதன்மூலம் உருவாகியுள்ளது.

Leave a Comment