பொறியியல் மற்றும் கலை, அறிவியல் படிப்புகளில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பப் பதிவு தொடக்கம்..!!

 பொறியியல் மற்றும் கலை, அறிவியல் படிப்புகளில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பப் பதிவு தொடக்கம்..!!

தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை, அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வமுடன் இன்று காலை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தொடங்கினர்.

இந்த செய்தியையும் படிங்க…

 மருத்துவ படிப்பில் 7.5 % இடஒதுக்கீடுக்கு எதிராக வழக்கு- ஒத்திவைப்பு..!! 

BE., B.Tech.,  பட்டப் படிப்புகளில் சேர:

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைப்பு பெற்றுள்ள சுமார் 500 பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படும் BE., B.Tech.,  உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் சேர இன்று முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை www.tneaonline.org, அல்லது www.tndte.gov.in என்ற இணைய தளங்களின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை முதல் மாணவர்கள் இணையதளம் மூலம் தங்களுக்கு விருப்பமான பாடங்களை தேர்வு செய்து விண்ணப்பிக்க தொடங்கினர்.

கலந்தாய்வு: 

செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 4ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும், அக்டோபர் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை துணைக் கலந்தாய்வு நடைபெறும் என்றும் தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. அத்துடன் அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் கலந்தாய்வை முடித்து மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை:

அதேபோன்று, தமிழகத்தில் இயங்கி வரும் 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடத்தப்படும் இளநிலைப் பட்டப் படிப்புகளில் முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இந்த படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tngasa.org மற்றும் www. tngasa.in என்ற இணைய தள முகவரிகளில் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 அதன்படி, தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்பில் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் பணியும் இன்று காலை முதல் தொடங்கியது. மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடங்களை தேர்வு செய்து இணையதளம் மூலம் விண்ணப்பித்தனர்.

 உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு:

மேலும், இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்களின் பட்டியல் மேற்கண்ட இணைய தள முகவரியில் உள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

இளநிலை பட்டப் படிப்புக்கான சேர்க்கைக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.48, பதிவுக் கட்டணம் ரூ.2.SC., ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை. பதிவுக் கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணங்களை டெபிட் கார்டு, கிரடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் இணைய தளம் மூலமாக செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை- 58 ஆக குறைக்க வலியுறுத்தல்..!!

 இணைய தளம் மூலம் கட்டணம் செலுத்த முடியாதவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் 

‘இயக்குநர், கல்லூரிக் கல்வி இயக்ககம்,

 சென்னை-6′ 

என்ற பெயரில் 26ம் தேதியோ அல்லது அதற்கு பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இணைய தளம் மூலம் இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இணையதள வசதி இல்லாதவர்கள் நெட் சென்டர்களில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Leave a Comment