பொது விடுமுறை அறிவிப்பு -தமிழக அரசு உத்தரவு..!!

  பொது விடுமுறை அறிவிப்பு -தமிழக அரசு


 உத்தரவு..!!

பிப்-19 தமிழகத்தில் பொது விடுமுறை:

பிப்ரவரி – 19ம் தேதி அன்று பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி வாக்குப்பதிவு நடைபெறும் நாளான 19-ம் தேதி அன்று பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான (Ordinary Election) (2022)க்கான வாக்குபதிவு 19-02-2022அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிப்பது பற்றி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளாட்சி முழு விவரம்:

  • 21- மாநகராட்சிகள்
  • 138- நகராட்சிகள்
  • 489- பேரூராட்சிகள்(கடம்பூர் தவிர)
  • மொத்தம்-648 

தமிழக அரசு அறிவிப்பு:

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான (Ordinary Election) 19-02-2022 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு 

மேற்படி  தேர்தல் நடைபெற உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளுக்கு 19-02-2022 அன்று பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக அறிக்கை 09-02-2022 அன்று தமிழ்நாடு அரசு சிறப்பு இதழில் வெளியிடப்படுகிறது.

Leave a Comment