பெண்களுக்கான இலவச தையல் இயந்திரம்- வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்..!!
தமிழகத்தில் சமூக நலன் மற்றும் உரிமைத் துறை மூலமாக வழங்கப்படும் பெண்களுக்கான இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பென்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியையும் படிங்க…
Delta Plus Virus – “கவலைப்பட வேண்டிய வைரஸ்”..?? எப்படித் தப்பிப்பது..??
இலவச தையல் இயந்திரம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பலரது பொருளாதார நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை சரி செய்ய அரசு தரப்பில் ரூ.4000 ரொக்கம் மற்றும் 14 மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சமூக நலன் மற்றும் உரிமைத் துறை மூலமாக வழங்கப்படும் பெண்களுக்கான இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்த ஆண்டில் 20 முதல் 40 வயதிற்குட்பட்ட விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளி, மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த ஏழை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படும்.
இந்த செய்தியையும் படிங்க…
வங்கி சேமிப்பு கணக்கு: தொடங்கும் போது -அறிந்து கொள்ள வேண்டியவை..!!
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க உரிய ஆவணங்களுடன் தங்களுக்கு தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் சமூக நல விரிவாக்க அலுவலர் மற்றும் ஊர்நல அலுவலரை அணுகி விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை 04362-264505 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.