பூனையால் – மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள்..!!
நாய், பூனைகள் செல்லப்பிராணியாக வீட்டில் வளர்க்கப்பட்டாலும் இவற்றுடன் நெருங்கி பழகுவதால் பல நோய்க உண்டாக அதிக வாய்ப்புள்ளது. பூனைகள் தங்கள் அன்பை வெளிப்படுத்த நம்மீது விழுந்து விளையாடும். அப்படி கொஞ்சி விளையாடும் போது, நமக்கு தெரியாமலே வளர்ப்புப் பிராணிகள் மீது இருக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சைகள், புழுக்கள், ஒட்டுண்ணிகள், தூசுக்கள், அழுக்குகள், இவைகள் மூலமாக பல உடல் உபாதைகள் வர வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த கிருமிகள் எல்லாம் குழந்தைகளை எளிதில் பாதிக்க செய்யும்.
நோய்த்தொற்று உள்ள பூனைகளைத் தொடுவதாலும், அவற்றின் உமிழ்நீர் நம்மீது படுவதாலும் நோய்கள் ஏற்படலாம். பூனையின் மேலிருக்கும் பூச்சுகள், உரோமங்கள் மூலமாகவும் விதவிதமான நோய்கள் உண்டாகலாம். நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள், முதியோர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் மேற்குறிப்பிட்ட கிருமிகளால் பாதிக்கப்படலாம்.
பூனைகளால் உண்டாகும் ” ‘டாக்ஸோபிளாஸ்மோசிஸ்” (Toxoplasmosis) என்ற நோய் மூளையைப் பாதிக்கும். செல்லப்பிராணிகளால்,
”கேம்பைலோபேக்டர்” (Camphylobacter infection) என்ற பாக்டீரியா தொற்று,
”கேட் ஸ்க்ராட்ச்” (Cat scratch disease) எனும் பாக்டீரியா தொற்று,
”ரிங்வார்ம்”(Ringworm) என்ற பூஞ்சைகளால் ஏற்படும் சருமப் பிரச்சனைகள் உண்டாகின்றன.
காசநோய்:
காசநோய் மைகோ பாக்டீரியம் ட்யூபர்குலோசிஸ் என்ற கிருமியால் உண்டாகிறது.இது ஒரு தொற்று நோய். பூனையிலிருந்து மனிதனுக்கு காசநோய் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளன. நோய் பாதிக்கப்பட்ட பூனையின் சுவாசம் நேரடியாக மனிதனுக்குச் செல்வதாலும், அதன் நீர்த்திவலை மற்றும் சளித்திவலை மனித சுவாசத்திற்குள் செல்வதாலும் இந்நோய் பரவுகிறது. இந்நோய் பாதிக்கப்பட்டால் மனிதனின் சுவாச மண்டல உறுப்புகள் மற்றும் உணவு மண்டல உறுப்புகள் மோசமாக பாதிக்கப்படுகின்றன.
- இத்தொற்று கிருமி உள்ள பூனையின் உடல் மெலிந்து கொண்டே இருக்கும்.
- அடிக்கடி இருமும்,
- சளியைக் கக்கும்,
- காய்ச்சல் இருக்கும்
இந்நோய் மனிதனை தாக்கியிருந்தால்,
- விடாமல் காய்ச்சல் இருக்கும்,
- சளியும் உண்டாகும்,
- உடல் மெலியும்,
- உணவு செரிக்காது,
- பசி இருக்காது,
- எடை குறையும்,
- நிணநீர் நாளங்களில் வீக்கம் ஏற்படும்.
எளிதில் நோயைக் கண்டுபிடித்து விரைவில் சிகிச்சை அளித்து சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொண்டால் இந்நோயை விரைவில் குணப்படுத்தலாம்.
டாக்ஸோபிளாஸ்மோசிஸ்:
டாக்ஸோபிளாஸ்மா கோன்டி என்ற ஒட்டுண்ணியின் மூலம் ஏற்படும் தொற்று. இந்த ஒட்டுண்ணி பல விலங்குகள் மற்றும் பறவைகளில் காணப்படுகின்றன. குறிப்பாக பூனைகளில் காணப்படுகின்றன. இந்நோய்த்தொற்றுடைய பூனையின் மலத்தை தொடுவதாலும் தொற்று ஏற்படலாம்.
இந்நோயின் அறிகுறிகள்:
பல நேரங்களில் எந்தவொரு அறிகுறியுமின்றி இந்நோய் உண்டாகலாம். பொதுவாக பாதிக்கப்பட்ட நபரின் நோயெதிர்ப்புத் திறனை பொறுத்து நோயின் அறிகுறிகள் மாறுபடும். வலுவான நோயெதிர்ப்புத் திறன் கொண்ட நபரிடம்
- தலைவலி
- காய்ச்சல்
- தசை வலி
- தொண்டைப்புண்
- கழுத்தில் இருக்கும் லிம்ப் நோடுகளின் வீக்கம்.
பலவீனமான நோய் எதிர்ப்பு திறன் கொண்ட நபரிடம்
- வலிப்புத்தாக்கங்கள்
- கடுமையான தலைவலி
- பார்வைக் கோளாறுகள்
- மனக்குழப்பம்
”கேட் ஸ்க்ராட்ச்” (Cat scratch disease):பூனை கீறல் நோய்:
Bartonella henselae என்ற பாக்டீரியா மூலம் இந்நோய் உண்டாகிறது. இந்நோய் எந்த வயதினரையும் தாக்கும். சரியான பராமரிப்பு இருந்தால் எளிதில் குணப்படுத்தலாம்.
இந்நோய் வராமல் தடுக்க வழிமுறைகள்:
- பூனைகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி உரிய காலத்தில் தடுப்பூசி போடுதல்.
- பூனைகளைக் வாரம் ஒரு முறையாவது குளிப்பாட்டச் செய்தல்.
- காயம் ஏற்பட்டிருப்பின் சிகிச்சை அழித்தல்
- நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் பூனையைத் தவிர்த்தல்.
- பூனைகளின் உமிழ்நீர், சிறுநீர் எல்லாம் நம்மேல் படாமல் தடுத்தல்.
- நாம் பயன்படுத்தும் பொருட்களை பூனைகள் தொடாமல் பார்த்துக்கொள்ளல்.
- பூனையின் இருப்பிடத்தை சுத்தமாக வைத்து இருத்தல்.
- பூனையைத் தொட்ட பிறகு கைகளைச் சுத்தமாக கழுவுதல்