புதிய படிப்புகள், பொறியாளர்களுக்கான தேவை அதிகரிப்பு: B.E., B.Tech., படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்..!!

 புதிய படிப்புகள், பொறியாளர்களுக்கான தேவை அதிகரிப்பு: B.E., B.Tech., படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்..!!

B.E., B.Tech., மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தைக் கடந்ததுள்ளது:

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 24 வரை அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 500 கல்லூரிகளில் பொறியியல் மற்றும் B.Tech., படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அறிவித்திருந்தது. இதில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் https://www.tneaonline.org, அல்லது https://www.tndte.gov.in என்கிற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொறியியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் :

இந்நிலையில், விண்ணப்ப பதிவு தொடங்கிய 8 நாட்களில் ஒரு லட்சத்தைக் கடந்தது. பொறியியல் படிப்புகளில் சேர இதுவரை 1,04,611 பேர் விண்ணப்பித்துள்ளனர். 74,309 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர். 56,935 பேர் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 

பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு தெரிவிப்பு:

புதிய படிப்புகள், பொறியாளர்களுக்கான தேவை அதிகரிப்பு போன்றவற்றால் பொறியியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர் என்றும், கடந்த ஆண்டுகளை விட அதிகளவில் மாணவர்கள் சேர வாய்ப்புள்ளதாக பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Leave a Comment