புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய அரசு பரிசீலனை-அரசு ஊழியர்கள் நம்பிக்கை..!!
கடந்த அதிமுக தலைமையிலான தமிழக அரசு 2003-ம் ஆண்டுக்குப் பின் அரசு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. அதில் குடும்ப ஓய்வூதியம் கிடையாது என்பன உள்ளிட்ட பல அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த செய்தியும் படிங்க…
PAN CARD தொலைந்தால் 5 நிமிடத்தில் பெறலாம்.! EASY STEPS ONLY..!!
இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். அதிமுக அரசு அதனை ஏற்கவில்லை. போராட்டங்களை நடத்தியும் அரசு அதனை கண்டு கொள்வதாக இல்லை.
இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல் படுத்தலாமா என்பது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்திருந்தார்.
அதன் படி, தற்போது புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்யக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் ஆய்வறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த செய்தியும் படிங்க…
அரசு பள்ளிகளில் -கல்வி தரத்தை மேலும் உயர்த்த அரசு ஆலோசனை..!!