புதிய அறிகுறிகளுடன் கொரோனா:அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை..!! - Tamil Crowd (Health Care)

புதிய அறிகுறிகளுடன் கொரோனா:அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை..!!

 புதிய அறிகுறிகளுடன் கொரோனா:அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஆக்சிஜனை திருப்பி விடக் கூடாது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த செய்தியையும் படிங்க….

முழு ஊரடங்கு அமல்..!! 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா இரண்டாம் அலை படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் நேற்று புதிதாக ஒரேநாளில் 14,842 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. 

சென்னையில் அதிகபட்சமாகாக 4086 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு 10,66,329 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இறப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.இதனால் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பின்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் நாளை முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை கூடுதல் கட்டுப்பாடுகள் தமிழக அரசால் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “கொரோனா சூழலிலும் கூட தடையின்றி ஆக்சிஜன் கிடைக்க வலுவான மருத்துவ கட்டமைப்பே காரணம். நமது தேவையை பூர்த்தி செய்த பிறகே பிற மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டும். 

இந்த செய்தியையும் படிங்க….

 மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு..!! 

தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஆக்சிஜனை திருப்பி விடக் கூடாது. வயிற்றுப்போக்கு, உடல்வலி போன்ற புதிய அறிகுறிகளுடன் கொரோனா பரவி வருகிறது. தமிழக மக்கள் பதற்றமின்றி இருக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் கோரிக்கை. தமிழக அரசு மருத்துவமனைகளில் ரெம்டெசிவர் மருந்து போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது” என்றார்.

Leave a Comment