பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு : பள்ளி மாணவர்களுக்கு 4 நாள்கள் தொடர் விடுமுறை..!!

 பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு : பள்ளி

 மாணவர்களுக்கு 4 நாள்கள் தொடர் விடுமுறை..!!

தமிழகத்தில் பள்ளிகளுக்கு நான்கு நாள்கள் தொடர்விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக  பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்த இரண்டு வருடங்களும் பள்ளிகளும், கல்லூரிகளும் நேரடியாக செயல்படாமல் ஆன்லைன்(online) முறையில் கற்றல் நடைபெற்றது. கொரோனா மூன்றாவது அலை தொடங்கி குறையத் தொடங்கிய பிறகு, கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன.

எனவே, வழக்கமாக நடைபெறும் கல்வியாண்டு முறையில் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, தேர்வு நாட்கள், ஆண்டு இறுதி விடுமுறை என நிறைய மாற்றங்களை மாணவர்கள் எதிர்கொண்டனர். இந்த நிலையில், ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை பள்ளி மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘2021- 2022-ம் கல்வியாண்டில் 

14-04-2022 வியாழக்கிழமை அன்று தமிழ் புத்தாண்டு 

 15-04-2022 வெள்ளிக்கிழமை அன்று புனித வெள்ளி ஆகிய இரண்டு நாட்களும் தொடர் அரசு விடுமுறை நாட்கள் என்பதால், 

16-04-2022 சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்படுகிறது. 

17-04-2022 ஞாயிறு பொது விடுமுறை.

விடுமுறை முடிவுற்று 18-04-2022 அன்று முதல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment