பள்ளிகளுக்கு முதல் பருவத்துக்குரிய பாடப்புத்தகம் அனுப்பும் பணி தொடக்கம்..!!
கரூர் மாவட்டத்தில், முதல் பருவத்துக்குரிய பாடப்புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கியது. தமிழகத்தில், இரண்டாம் கட்ட CORONA பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. முதல் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. மீண்டும் ஊரடங்கு(LOCK DOWN) அறிவிக்கப்பட்டது. தற்போது, ஊரடங்கு உத்தரவு வரும், 21 வரை பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியையும் படிங்க…
பள்ளிகள் இப்போதைக்கு திறக்கப்படாது: அமைச்சர் ..!!
ஆனால், பள்ளி, கல்லூரிகளில் நிர்வாக பணிகளை தொடங்க தமிழக அரசு அனுமதியளித்தது. இதையடுத்து, பள்ளிகளுக்கு தலைமையாசியர்கள், ஆசிரியர்கள் வர வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நேற்று, கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து, முதல் கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6th வகுப்பு முதல், Plus Two வரை படிக்கும், 58 ஆயிரத்து, 950 மாணவ, மாணவியருக்கு முதல் பருவத்துக்குரிய பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தொடங்கியது.