பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை தீர்க்கும் -நில நெல்லி ..!!

 பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை தீர்க்கும் -நில நெல்லி ..!!

நில நெல்லி என்பது சிறப்பு வாய்ந்த மூலிகை. கீழாநெல்லி போன்று அடிப்பகுதி நெல்லி வடிவத்தில் இருக்கும். 

  • நில நெல்லி மஞ்சள் காமாலை மற்றும் தோல் நோய்களுக்கு ஏற்ற ஒரு மாமருந்தாக பார்க்கப்படுகிறது. 
  • விரை வீக்கத்தைக் குறைக்கும் திறன் கொண்டது.
  •  தீராத காய்ச்சலையும் போக்கும்.
  •  பசியைத் தூண்டும். 
  • வயிற்றுப் புண்ணை குணப்படுத்தவல்லது.
  •  வயிற்றுப்போக்கு சீத பேதி போன்ற பிரச்சினையெல்லாம் நிறுத்தும் மருத்துவ குணம் கொண்டது.
  • ஒரு கைப்பிடி அளவு நில நெல்லி இலை மற்றும் வேரை எடுத்துக் கொள்ளுங்கள். அதோடு கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ப்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். பின்னர், வடிகட்டி பாலில் கலந்து குடிக்கவும். 100 மிலி வரை இந்த மருந்தை குடித்தால் வயிற்றுப்போக்கு, வெள்ளைப்படுதல் மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சினைகள் குணமாகும்.
  •  நில நெல்லி இலை முதல் வேர் வரை மருத்துவ பயன் கொண்டது. அடிவயிற்று வலி, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகளை குணமாக்க நில நெல்லியைப் பயன்படுத்தி மருந்து தயார் செய்ய முடியும்.
  •  நில நெல்லியின் இலைகளுக்கு இடையே சிறிய காய்கள் இருக்கும். அந்த சிறிய நில நெல்லிகள் தோல்நோயை குணப்படுத்த உதவும். இதை வாய்வழியே உடலுக்குள் எடுத்துக்கொண்டால் வயிற்று வலி, சிறுநீர் தாரை வலி, மாதவிடாய் பிடிப்பு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் எல்லாம் குணமாகும்.

Leave a Comment