நீர்வள, பொதுப்பணியில் இடமாறுதல்: பொறியாளர்களுக்கு JUNE 30 வரை வாய்ப்பு..!!

 நீர்வள, பொதுப்பணியில் இடமாறுதல்: பொறியாளர்களுக்கு JUNE 30 வரை வாய்ப்பு..!!

நீர்வளம், பொதுப்பணித்துறையில் விருப்ப இடமாறுதல் பெற, பொறியாளர்களுக்கு, June  30 வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த, 2007 முதல், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில், நீர்வள ஆதாரத்துறை; கட்டடம், கட்டுமானம், பராமரிப்பு துறைக்கென, தனித்தனியே பணி நியமனம் நடந்தது. 

இந்த செய்தியையும் படிங்க… 

 வங்கி சேமிப்பு கணக்கு: தொடங்கும் போது -அறிந்து கொள்ள வேண்டியவை..!! 

அவர்கள், துறை விட்டு துறை கோரும் வாய்ப்பில்லை. அதேநேரம், அவர்களுக்கு முன், பொதுப்பணியில் இரு துறைக்கும் ஒருசேர பணியமர்த்தப்பட்டவர்கள் உள்ளனர். தற்போது, அவர்களுக்கு விரும்பும் துறையில் பணிபுரிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 அதற்காக வரும், 30க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நீர்வள ஆதாரத்துறையில் பணிபுரிவோர்,

 கட்டடம், 

கட்டுமானம்,

 பராமரிப்பு துறைக்கும், 

அங்கு பணிபுரிவோர், 

நீர்வள ஆதாரத்துறைக்கும் விருப்ப இட மாறுதல் கோரலாம்.

Leave a Comment